14436 எழுத்துத் தமிழ் (Lekana Demala Basa).

எஸ்.சுசீந்திரராஜா, எஸ்.தில்லைநாதன், அபேசிங்க ஜயக்கொடி. ராஜகிரிய: அரசகரும மொழிகள் திணைக்களம், பாஷா மந்திரய, 341/7, கோட்டே வீதி, 7ஆவது பதிப்பு, 2019, 1வது பதிப்பு, 2008. (கொழும்பு: அரச பதிப்பகத் திணைக்களம்). xxxii, 323 பக்கம், விலை: ரூபா 410., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-8190-22-7. அரசகரும மொழிகள் கொள்கையை பயனுள்ள வகையில் செயற்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலே பல வேலைத்திட்டங்கள் அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக இந்நூல் வெளியீடும் அமைந்துள்ளது. சிங்கள அரச ஊழியர்கள் தமது கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான அடிப்படை பேச்சுத் தமிழைக் கற்கும் வகையில் இதிலுள்ள பாடத்திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இந் நூல் அரசாங்க நிருவாக சுற்றறிக்கை 3/2007இலும் 7/2007இலும் குறிப்பிடப்பட்டுள்ள தேர்ச்சி மட்டம் III இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65461).

ஏனைய பதிவுகள்