14436 எழுத்துத் தமிழ் (Lekana Demala Basa).

எஸ்.சுசீந்திரராஜா, எஸ்.தில்லைநாதன், அபேசிங்க ஜயக்கொடி. ராஜகிரிய: அரசகரும மொழிகள் திணைக்களம், பாஷா மந்திரய, 341/7, கோட்டே வீதி, 7ஆவது பதிப்பு, 2019, 1வது பதிப்பு, 2008. (கொழும்பு: அரச பதிப்பகத் திணைக்களம்). xxxii, 323 பக்கம், விலை: ரூபா 410., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-8190-22-7. அரசகரும மொழிகள் கொள்கையை பயனுள்ள வகையில் செயற்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலே பல வேலைத்திட்டங்கள் அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக இந்நூல் வெளியீடும் அமைந்துள்ளது. சிங்கள அரச ஊழியர்கள் தமது கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான அடிப்படை பேச்சுத் தமிழைக் கற்கும் வகையில் இதிலுள்ள பாடத்திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இந் நூல் அரசாங்க நிருவாக சுற்றறிக்கை 3/2007இலும் 7/2007இலும் குறிப்பிடப்பட்டுள்ள தேர்ச்சி மட்டம் III இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65461).

ஏனைய பதிவுகள்

14215 தெய்வீக பாடல்கள்.

பொன். வல்லிபுரம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: மயூரபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் தேவஸ்தானம், 1வது பதிப்பு, 1991. (கொழும்பு 10: இம்பீரியல் பிரஸ், 25, முதலாம் டிவிஷன், மருதானை). 114 பக்கம், விலை: ரூபா 50.00,

14471 சித்த மருத்துவம் 199/93.

எம்.மனோரஞ்சிதமலர் (இதழாசிரியர்), பி.பிரதீபா (உதவி ஆசிரியர்). யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ மாணவர் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1993. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் தரப்படவில்லை). (18), 44, xx பக்கம், தகடு, விலை:

14877 செ.கதிர்காமநாதன் படைப்புகள்.

செ.கதிர்காமநாதன் (மூலம்), அ.சிவஞானசீலன், த.அஜந்தகுமார் (தொகுப்பாசிரியர்கள்). கனடா: தேடகம், இணை வெளியீடு, கரவெட்டி: கலாசாரப் பேரவை, பிரதேச செயலகம், 1வது பதிப்பு, 2015. xix, 552 பக்கம், விலை: ரூபா 700., அளவு: 21×14.5