த.துரைசிங்கம் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1997. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, G.L. 1/2, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). (8), 166 பக்கம், விலை ரூபா 120., அளவு: 22×14 சமீ. 1997ஆம் ஆண்டு முதல் நடைபெறும் க.பொ.த. உயர்தர பரீட்சைக்குரிய பாட நூல் இதுவாகும். இதில் கட்டுரை ஆசிரியர்கள் பற்றிய குறிப்பு, அரும்பத விளக்கம், பயிற்சி வினாக்கள், உரைநடை வளர்ச்சிப் பாங்கு தொடர்பான கட்டுரை, ஆகிய அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும் இதில் பல்வேறு தமிழறிஞர்களின் உரைநடைப் பாங்கு அவர்களது தேர்ந்த படைப்பாக்கங்களின் வழியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திருத்தொண்டர் பெரியபுராண வசன முகவுரை (ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்), தமிழ் பாஷைக்கு உள்ள குறைகள் (பாரதியார்), தமிழர் கொள்கை (மறைமலை அடிகள்), மஹாகவி பாரதியார் (வ.ரா.), கல்வி (வி.கல்யாணசுந்தரனார்), இலக்கியச் சுவை (சுவாமி விபுலானந்தர்), ஆசிரியரை அடைந்தது (உ.வே.சாமிநாதையர்), தமிழும் பிற மொழியும் (பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை), பண்பாடு (ராஜாஜி), ஓய்வுநேரம் (சி.என்.அண்ணாதுரை), தம்பிக்கு- கடிதம் (மு.வரதராசன்), பாட்டும் ஓசையும் (பேராசிரியர் வி. செல்வநாயகம்), பகிரதப் பிரயத்தனம் (பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை), கலையும் காட்சியும் (ஏ.எம்.ஏ.அஸீஸ்), பிணைக்கப்பட்ட கடனை விட வெளிமுதலீட்டை வரவேற்பதே நலம் (ஏ.என்.சிவராமன்) ஆகிய 15 கட்டுரைகள் மாதிரிக்கொன்றாகத் தரப்பட்டுள்ளன. பின்னிணைப்புகளாக தமிழ் உரைநடை வளர்ச்சிப் பாங்கு, அருஞ்சொல் பொருள் விளக்கம், பயிற்சி வினாக்கள் ஆகியன தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 31016).