ஆசிரியர் குழு. ராஜகிரிய: இனவிவகார, தேசிய நல்லிணக்க, கனிப்பொருள் வள, அபிவிருத்தி அமைச்சு, அரசகரும மொழிகள் திணைக்களம், பாஷா மந்திரய, 347/7, கோட்டே வீதி, 1வது பதிப்பு, 2001. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், பானலுவ). (6), 20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×20 சமீ. தமிழைக் கற்கவிரும்பும் எவருக்கும் தேவையான அடிப்படை பேச்சுத் தமிழ் பயிற்சியை வழங்கும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலின் ஆசிரியர் குழுவில் களனிப் பல்கலைக்கழக மொழியியல்துறை விரிவுரையாளர் எஸ்.ஜே. யோகராஜா, அரச கரும மொழிகள் திணைக்கள மொழிபெயர்ப்புக் கண்காணிப் பாளர்களான திருமதி நந்தா கல்பாயா, செல்வி ஜெ.மகாதேவா, மேல்மாகாணக் கல்வித் திணைக்களத்தின் தமிழ்ப் பகுதிக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ்.எம்.அஷ்ரப், கல்வி அமைச்சின் போதனாசிரியர் ஜனாப் எம்.எச். எம்.சிராஜ், கல்விநூல் வெளியீட்டுத் திணைக்களத்தைச் சேர்ந்த ஜனாப் வை.எல். எம்.ராசிக் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். கூட்டிணைப்பாளராக அரசகரும மொழிகள் திணைக்களக் கல்வியாளர் விக்ரமசிரி விக்கிரமாராச்சி பணியாற்றியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31183).