14442 பேச்சுத் தமிழ்(Katana Demala Basa).

எஸ்.சுசீந்திரராஜா, எஸ்.தில்லைநாதன், அபேசிங்க ஜயக்கொடி. ராஜகிரிய: அரசகரும மொழிகள் திணைக்களம், பாஷா மந்திரய, கோட்டே வீதி, 10ஆவது பதிப்பு, 2019, 1வது பதிப்பு, மார்ச் 2007. (கொழும்பு: அரச பதிப்பகத் திணைக்களம்). xiv, 364 பக்கம், அட்டவணைகள், அளவு: 21×13.5 சமீ. அரசகரும மொழிகள் கொள்கையை பயனுள்ள வகையில் செயற்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலே பல வேலைத்திட்டங்கள் அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக இந்நூல் வெளியீடும் அமைந்துள்ளது. சிங்கள அரச ஊழியர்கள் தமது கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான அடிப்படை பேச்சுத் தமிழைக் கற்கும் வகையில் இதிலுள்ள பாடத்திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இந் நூல் 2007.02.09ஆம் திகதிய அரசாங்க நிருவாக சுற்றறிக்கை 3/2007இல் குறிப்பிடப்பட்டுள்ள தேர்ச்சி மட்டம் IIII இலக்காகக் கொண்டு தயாரிக்கப் பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65460).

ஏனைய பதிவுகள்

14542 மொழி வேலி கடந்து: நவீன சிங்கள இலக்கியங்கள் பற்றிய ஒரு பார்வை.

மேமன்கவி. கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661,663,675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2013. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). xxv, 26-135 பக்கம், விலை: ரூபா 350.,