14445 க.பொ.த (உயர்தரம்) இணைந்த கணிதம்: எளிமை இசை இயக்கம்.

தேசிய கல்வி நிறுவகம். மகரகம: விஞ்ஞான, கணித, சுகாதார, உடற்கல்விப் பிரிவு, கலைத்திட்ட அபிவிருத்தி நிலையம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2007. (மகரகம: அச்சகப் பிரிவு, தேசிய கல்வியியல் நிறுவகம், பானலுவ). ix, 50 பக்கம், விலை: ரூபா 80.00, அளவு: 29.5×21 சமீ. விசையியலிலும் இயற்பியலிலும், எளிமை இசையியக்கம் அல்லது தனிச் சீரிசை இயக்கம் என்பது மீள் விசைக்கு இடப்பெயர்ச்சி நேர் விகித சமமாக உள்ள அலைவு இயக்கமாகும். (அதாவது ஆர்முடுகல் எப்போதும் நிலைத்த புள்ளியை நோக்கி இருக்கும்). இது சுருளிவில்லின் அலைவு போன்ற பல்வேறு இயக்கங்களின் கணித மாதிரியாக கொள்ளப்படுகிறது. இதைவிட மற்ற இயக்கங்களான ஒரு எளிய ஊசலின் இயக்கம் மற்றும் மூலக்கூறு அதிர்வு போன்றவற்றையும் ஏறக்குறைய எளிய இசையியக்கமாக கொள்ளலாம். ஹ_க் இன் விதிக்கு ஏற்ப மீள்விசைக்கு உள்ளாகும் சுருளி வில்லில் உள்ள ஒரு திணிவின் இயக்கத்தை எளிய இசையியக்கமாக வகைகுறிக்கலாம். எளிய இசை இயக்கம் நேரத்துடன் சைன் வளையியாகவும் ஒரேயொரு ஒத்ததிர்வு அதிர்வெண்ணைக் கொண்டதாகவும் உள்ளது. எளிய இசையியக்கமானது மிகவும் சிக்கலான இயக்கத்தை ஃபோரியர் பகுப்பாய்வு நுட்பங்கள் மூலம் வகைப்படுத்த ஒரு அடிப்படையை வழங்குகிறது. இந்நூல் எளிமை இசை இயக்கம், எளிமை இசை இயக்கத்தை, சீரான வட்ட இயக்கத்தின் மூலம் விவரணம் செய்தல், மீள்தன்மை இழையொன்றுடன் இணைக்கப்பட்டுள்ள துணிக்கையொன்றின் இயக்கம் ஆகிய மூன்று பாடங்களில் விளக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65688).

ஏனைய பதிவுகள்

14545 கம்பராமாயணம் யுத்தகாண்டம் -கும்பகருணன் வதைப்படலம் (முதல் 170 செய்யுள்கள்).

பா.பரமேசுவரி (உரையாசிரியர்). கொழும்பு: கொழும்பு அப்போத்திக்கரிஸ் கம்பெனி லிமிற்றெட், குமார வீதி, கோட்டை, 1வது பதிப்பு, பெப்ரவரி 1956. (கொழும்பு: அப்போத்திக்கரிஸ் கம்பெனி லிமிட்டெட், குமார வீதி, கோட்டை). (2), 152 பக்கம், விலை:

12763 – பிரதேச சாகித்திய விழா 1997: சிறப்பு மலர்.

மலர்க்குழு. மட்டக்களப்பு: பிரதேச செயலகம், மண்முனைப்பற்று, ஆரையம்பதி, 1வது பதிப்பு, 1997. (அக்கரைப்பற்று: செலெக்ஷன் ஓப்செட்). xii, 48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5 x 17.5 சமீ. மண்முனைப் பிரதேசத்தின் இலக்கியப்

14173 ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜயந்தி மலர்-05.01.2000.

மலர்க் குழு. தெகிவளை: ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயம், 3/11, ஸ்ரீபோதிருக்கம வீதி, களுபோவிலை, 1வது பதிப்பு, ஜனவரி 2000. (அச்சக விபரம் தரப்படவில்லை). (12), 236 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

12396 – சிந்தனை: தொகுதி I இதழ் 1 (பங்குனி 1983).

சி.க.சிற்றம்பலம் (இதழாசிரியர்), சி.முருகவேள் (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, மார்ச் 1983. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம், 430, காங்கேசன்துறை வீதி). 100 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா

14583 எல்லையற்ற வான்வெளியில்.

அனுராதா. கொழும்பு 6: ஸ்ரீநிதி பதிப்பகம், 42/11, முதல் தளம், சுவி சுத்தர்ராம வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2016. (சென்னை 14: சீனிவாசா ஆப்செட்). 112 பக்கம், விலை: ரூபா 250.,

14112 உலக இந்து மகாநாடு: ஆத்மஜோதி சிறப்பு மலர் ;

நா.முத்தையா (ஆசிரியர்). நாவலப்பிட்டி: நா.முத்தையா, ஆத்மஜோதி நிலையம், 1வது பதிப்பு, 1982. (நாவலப்பிட்டி: ஸ்ரீ ஆத்மஜோதி அச்சகம்). (16), 168+(32) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27.5×21.5 சமீ. ஆசியுரைகள், வாழ்த்துரைகளுடன், மேன்மை கொள்