தேசிய கல்வி நிறுவகம். மகரகம: விஞ்ஞான, கணித, சுகாதார, உடற்கல்விப் பிரிவு, கலைத்திட்ட அபிவிருத்தி நிலையம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2007. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், பானலுவ). vii, 35 பக்கம், விலை: ரூபா 60.00, அளவு: 29.5×21 சமீ. க.பொ.த. (உயர்தரம்) இணைந்த கணித பாடத்திட்டத்தின் கீழ் ஏகபரிமாண உந்தமும் கணத்தாக்கும் என்ற பாடப்பகுதிக்கான இவ்வளநூலானது ஆசிரியர்களும் மாணவர்களும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. விசையொன்றின் கணத்தாக்கு, எகபரிமாண உந்தக் காப்பு விதி, கணத்தாக்கு தொடர்பான பிரசினங்கள், நெரடி மொத்தல் ஆகிய நான்கு அத்தியாயங்களில் பாடங்கள் வகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் Pam 5745).