தேசிய கல்வி நிறுவகம். மகரகம: விஞ்ஞான, கணித, சுகாதார, உடற்கல்விப் பிரிவு, கலைத்திட்ட அபிவிருத்தி நிலையம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2007. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், பானலுவ). vii, 59 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 90.00, அளவு: 29.5×21 சமீ. இந்நூல் இடைநிலைக் கல்வியை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையுடன் தயாரிக்கப்பட்டது. இந்நூலில் தளமொன்றின் மீது ஒரு துணிக்கையின் இயக்கம், ஒரே தளத்தில் இயங்கும் இரண்டு துணிக்கைகளுக்கிடையில் உள்ள தொடர்பு வேகம், ஒரே தளத்தில் இயங்கும் இரண்டு துணிக்கைகளுக்கு இடையிலுள்ள கிட்டிய தூரமும் அக்கிட்டிய தூரத்தில் அத்துணிக்கைகள் அமைவதற்கு எடுத்த நேரமும், துணிக்கை தரப்பட்ட பாதையைப் பூர்த்தி செய்வதற்கு எடுக்கும் நேரம், எறிபடை ஆகிய ஐந்து பாடங்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65687).