தேசிய கல்வி நிறுவகம். மகரகம: விஞ்ஞான, கணித, சுகாதார, உடற்கல்விப் பிரிவு, கலைத்திட்ட அபிவிருத்தி நிலையம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2007. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், பானலுவ). vii, 40 பக்கம், விலை: ரூபா 65.00, அளவு: 29.5×21 சமீ. தொடரிகளும் தொடர்களும், கூட்டல் தொடர், பெருக்கல் தொடர், கூட்டல்- பெருக்கல் தொடர், தொடர்களைக் கூட்டும் விசேட முறைகள், தொடரொன்றின் ஒருங்கல் ஆகிய ஆறு பாடங்களின் மூலம் இணைந்த கணிதத்தில் வரும் “தொடர்களின் கூட்டல்” என்ற பகுதி விளக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் Pam5744).
14554 ஜீவநதி ஆடி 2011: உளவியல் சிறப்பிதழ்.
க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆடி 2011. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). 48