14451 க.பொ.த (உயர்தரம்) இணைந்த கணிதம்: நியுற்றனின் இயக்க விதிகள்.

தேசிய கல்வி நிறுவகம். மகரகம: விஞ்ஞான, கணித, சுகாதார, உடற்கல்விப் பிரிவு, கலைத்திட்ட அபிவிருத்தி நிலையம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2007. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், பானலுவ). ix, 34 பக்கம், விலை: ரூபா 60.00, அளவு: 29.5×21 சமீ. க.பொ.த. (உயரதரம்) இணைந்த கணித பாடத்திட்டத்தின் கீழ் நியுற்றனின் இயக்க விதிகள் என்ற பாடப்பகுதிக்கான இவ்வளநூலானது ஆசிரியர்களும் மாணவர்களும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. நியுற்றனின் இயக்க விதிகள் என்ற பாடமும் நியுற்றனின் இயக்க விதிகள் பிரயோகம்-1, நியுற்றனின் இயக்க விதிகள் பிரயோகம்-2, நியுற்றனின் இயக்க விதிகள் பிரயோகம்-3 ஆகிய பாடங்களும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் Pam5749).

ஏனைய பதிவுகள்