தேசிய கல்வி நிறுவகம். மகரகம: கணிதத்துறை, விஞ்ஞான தொழில்நுட்ப பீடம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2018. (மகரகம: அச்சகப் பிரிவு, தேசிய கல்வியியல் நிறுவகம்). ix, 150 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 325., அளவு: 29×20.5 சமீ., ISBN: 978-955-654-730-6. 2017ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் 2019ஆம் ஆண்டு பரீட்சைக்கான புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டது. இதில் இணைந்த கணிதம் I பகுதி A, பகுதி B ஆகியவையும், இதில் இணைந்த கணிதம் II பகுதி A, பகுதி B ஆகியவையும் பயிற்சி வினாக்களுக்கான தீர்வுகளும் தரப்பட்டுள்ளன. மாணவர்களுக்குப் போதிய பயிற்சிகளை வழங்குமுகமாகவும், பாடப் பரப்பினைக் கற்றபின் பரீட்சைக்கு தயாராகுவதற்கான ஒரு மீட்டல் பயிற்சியினை வழங்கும் நோக்கிலும் இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. இது ஓர் மாதிரி வினாத்தாள் தொகுதி அன்று. விடைகளைச் சரிபார்ப்பதற்கும் படிமுறைகளை சரியாகப் பின்பற்றுவதற்கும் உதவியாக விடைகள் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65691).
14586 என் இதயம் பேசுகிறது.
ஏ.சீ.எம்.இப்றாஹீம். கிண்ணியா 4: பேனா பதிப்பக வெளியீடு, 118, நகரசபை வீதி, 1வது பதிப்பு, 2015. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 108 பக்கம், விலை: ரூபா 350., அளவு: