தேசிய கல்வி நிறுவகம். மகரகம: விஞ்ஞான, கணித, சுகாதார, உடற்கல்விப் பிரிவு, கலைத்திட்ட அபிவிருத்தி நிலையம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2007. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், பானலுவ). vii, 43 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 70.00, அளவு: 29.5×21 சமீ. இந்நூலில் வேலை (வேலை-அறிமுகம்/ மாறா விசை ஒன்றினால் செய்யப்படும் வேலை/ புள்ளிப் பெருக்கத்தின் மூலம், மாறா விசையொன்றினால் செய்யப்படும் வேலையைக் கணித்தல்/ மாறும் விசையொன்றினால் செய்யப்படும் வேலை/ வேலையின் அலகு, பரிமாணம்), சக்தி (சக்தி-அறிமுகம்/ சக்தியின் அலகு பரிமாணம்/ வகைகள் சக்தி/ காப்பு நிலை விசை/ விரய விசை/ அழுத்த சக்தி), மீள்தன்மை அழுத்த சக்தி (மீள்தன்மை இழை/ மீள்தன்மை வில்/ ஊக்கின் விதி/ மீள்தன்மை அழுத்த சக்தி), பொறிமுறைச் சக்திக் காப்பு (அறிமுகம்/ பொறிமுறைச் சக்திக் காப்புக் கோட்பாடு), வலு (வலு/ வலுவின் அலகு, பரிமாணம்ஃ எஞ்சினொன்றின் வலு) ஆகிய பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் Pam 5747).