14456 மாற்றல் காரணிகளும் அட்டவணைகளும் (இலங்கைக் கட்டளை 99: 1975).

மெற்றிக் பகுதிக் குழு. கொழும்பு 3: இலங்கைக் கட்டளைகள் பணியகம், 53, தர்மபால மாவத்தை, 1வது பதிப்பு, 1975. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). 180 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 7.50, அளவு: 29.5×21.5 சமீ. இலங்கை மெற்றிக் முறைக்கு மாறிய வேளையில் பிரித்தானிய அலகுகளுக்குரிய மெற்றிக் முறைச் சமானங்களும் மெற்றிக் முறை அலகுகளுக்குரிய பிரித்தானிய அலகுச் சமானங்களும் அவசியமாயின. இக்கட்டளையில் (Standard) அடங்கியுள்ள பௌதிகப் பெறுமானங்கள் பிரதானமாக அளவையியல், பொறிமுறையியல், வெப்பவியல் சம்பந்தப்பட்டவை ஆகும். மெற்றிக் முறையில் எற்கெனவே இருந்த தனித்த மின்னலகுகளும், இரண்டு அலகு முறைகளிலும் ஒரே பெறுமானத்தைக் கொண்ட வேறுபட்ட அலகுகளுக்கிடையேயான மாற்றல்களும் தவிர்க்கப் பட்டுள்ளன. இக்கட்டளையில் பிரித்தானிய முறையிலிருந்து மெற்றிக் முறைக்கும் மெற்றிக் முறையிலிருந்து பிரித்தானிய முறைக்கும் மாற்றல் செய்வதற்கான காரணிகளும் அட்டவணைகளும் அடங்கியுள்ளன. அத்துடன் சில அமெரிக்க அலகுகளுக்கான மாற்றல் காரணிகளும் அடங்கியுள்ளன. நீளம், பரப்பு, கனவளவு, கொள்ளளவு, இரண்டாம் முறைத் திருப்புதிறன் பரப்பு, கோணம், வேகம், திணிவு, திணிவு/நீளம், திணிவு/பரப்பு, அடர்த்தி, விசை, அமுக்கம், தகைப்பு, வெப்பநிலை, வெப்பம் வேலை சக்தி, வலு, தன்வலு (கலோரி பெறுமானம், திணிவு அடிப்படை), கலோரிப் பெறுமானம் (கனவளவு அடிப்படை), தன் வெப்பக் கொள்ளளவு (கனவளவு அடிப்படை), வெப்பப் பாய்ச்சல் வீதச் செறிவு, வெப்பக் கடத்துதிறன், வெப்பக் கடத்து சக்தி ஆகிய தலைப்புகளில் இந்நூலில் தகவல் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 34483).

ஏனைய பதிவுகள்