A.மகாதேவன். தெல்லிப்பழை: P.ஆறுமுகம், இரசாயனவியற் கழகம், குரும்பசிட்டி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (ஏழாலை: மகாத்மா அச்சகம்). (2), 52 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 10.00, அளவு: 21.5×14 சமீ. இயற்கை வளங்களான வளி வளம் (அமோனியா, நைத்திரிக் அமிலம், ஒட்சிசன், ஒட்சைட்டுகள்), கடல் வளம் ((NaCl பிரித்தெடுப்பு, NaOH தயாரிப்பு, சவர்க்காரம், NaHCO3 /NaCO3 தயாரிப்பு, இலங்கையின் கனியங்கள்), புவி வளம் (பாறைகள், கல்சியம் சேர்வைகள், களிமண், சீமெந்து, இரும்பு, கண்ணாடி, இரத்தினக் கற்கள், வைரம், பென்சிற் கரி, நீர், சல்பூரிக் அமிலம்), தாவர வளம் (பதநீரில் இருந்து பெறக்கூடியவை, சாறெண்ணெய்கள், நீராவி வடித்தல் முறை, இறப்பர்) ஆகிய நான்கு வளங்கள் தொடர்பான இரசாயனவியல் அறிவினை இந்நூல் வழங்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 40654).