14459 வேற்றுக் கிரக மனிதர்கள்.

கனி-விமலநாதன் (இயற்பெயர்: சின்னையா ரிட்ஜ்வே விமலநாதன்). சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2005. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆஃப்செட் பிரிண்டேர்ஸ்). 128 பக்கம், விலை: இந்திய ரூபா 35.00, அளவு: 17.5×12.5 சமீ. ஏலியன்ஸ் எனப்படும் வேற்றுக்கிரக ஜீவராசிகள் பற்றிப் பேசும் இந்நூலில் விண்வெளி, வேற்றுக்கிரக மனிதர்கள்- பழைய சான்றுகளில் பார்வை, வயல் வட்டங்கள், வேற்றுக்கிரக மனிதர்களின் விமான விபத்துக்கள், றொஸ்வெல் விவகாரம், றொஸ்வெல் விவகார முடிவு, இன்னமும் சில, முடிவாக, உயிரினத்தின் தோற்றம், வெளிக்கிரகவாசிகள் என்பது சாத்தியமா?, வெளி உலகவாசிகளுடன் தொடர்புகள், வேற்றுக்கிரக மனிதர்கள் -சான்றுகள் ஆகிய 12 கட்டுரைகளின் வாயிலாக வேற்றுக்கிரக மனிதர்கள் பற்றிய பல்வேறு தகவல்களை ஆசிரியர் பதிவுசெய்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞானப் பட்டதாரியான விமலநாதன் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கையில் கணித, பௌதிக ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் கனடாவிற்குப் புலம்பெயர்ந்து சென்று அங்கு குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 32799).

ஏனைய பதிவுகள்

14150 நல்லைக்குமரன் மலர் 2007.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக் குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2007. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). Viii, 154 + (36) பக்கம்,

12037 வாழ்க்கை நிகழ்ச்சிக் கோவையும் இலங்கை மிஷனின் சுருக்கமும்.

ஹரியட் வாட்ஸ்வேர்த் வின்ஸ்லோ (ஆங்கில மூலம்), மைரன் வின்ஸ்லோ (தொகுப்பாசிரியர்), வண. இரா. டா. அம்பலவாணர் (தமிழாக்கம்). சுன்னாகம்: சமூக ஆய்வுக்கான கிறிஸ்தவ மையம், கிறிஸ்தவ இறையியல் கல்லூரி, மருதனார்மடம், 1வது பதிப்பு, ஆண்டு