14461 பிரயோக உடற்றொழிலியல்(முதலாம்பாகம்).

சாம்சன் றைற் (மூலம்), சிரில் ஏ.கீல், எறிக் நீல் (புதுக்கியோர்), அ.சின்னத்தம்பி (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்: வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 1வது பதிப்பு, பெப்ரவரி 1974. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி). (8), 371 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 25.00, அளவு: 26×22 சமீ. இரு பாகங்களில் அச்சிடப்பெற்ற இந்நூலின் முதற் பாகம் நான்கு பகுதிகளைக் கொண்டது. “அகச்சூழலின் மாறிலி நிலையின் சீராக்கம்” (கலமும் உடற்பாயிகளும், உடல்நீரும் உடற்பாயியும், குருதி), “இதயமும் சுற்றோட்டமும்” (பொது, மயிர்க்குழாய்ச் சுற்றோட்டம், நாளங்களும் நாள மீளடைவும், இதயத்தின் கட்டமைவும் இயல்புகளும், மனிதனில் இதய வெளியீட்டை அளவிடுதல், இதய வீதம், இதய மின்தொழிலியல், இதய கலனத் தொகுதியின் நரம்பாட்சி, தனித்திறன் பிரதேயங்க;டாகச் சுற்றோட்டம், உயர் குருதியமுக்கம்), “மூச்செடுத்தல் (சுவாசம்)” (மூச்செடுத்தலின் சீராக்கம், குருதியால் ஒட்சிசன் காவப்படல், உடலில் காபனீர் ஒட்சைட்டுக் கொண்டு செல்கை, மூச்செடுத்தலின் இரசாயன ஒழுங்காக்கம், இடர் மூச்சுயர்), “ஊறுநீரியும் உடற்பாயிகளின் சீராக்கமும்” (ஊறு நீரியின் கட்டமைவும் வினையங்களும், ஊறுநீரியால் நீர்ச் சமநிலையினதும் உடற்பாயிகளின் கூற்றமைவினதும் சீராக்கம், நோய் நிலையில் ஊறுநீரி வினையம், உணவுக்கால்வாய்ப் பிறழ்வுகள் உடற்பாயிகளுக்கு உறுத்தும் விளைவுகள்) ஆகிய பாடங்களாக இவை பிரிக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2829).

ஏனைய பதிவுகள்

Better Cellular Gambling enterprises Usa

Content Simple tips to Enjoy Game Inside A mobile Casino Greatest Cellular Gambling enterprise Sites To have United kingdom Professionals Screen Mobile Gambling establishment Applications

14016 கொழும்புத் தமிழ்ச்சங்கம்: 57வது ஆண்டுப் ; பொது அறிக்கை (1998-1999).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: ஆட்சிக் குழு, கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1999. (கொழும்பு-13: எம்.ஜி.எம். பிரிண்டிங் வேர்க்ஸ், 102/2, Wolfendhal