14461 பிரயோக உடற்றொழிலியல்(முதலாம்பாகம்).

சாம்சன் றைற் (மூலம்), சிரில் ஏ.கீல், எறிக் நீல் (புதுக்கியோர்), அ.சின்னத்தம்பி (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்: வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 1வது பதிப்பு, பெப்ரவரி 1974. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி). (8), 371 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 25.00, அளவு: 26×22 சமீ. இரு பாகங்களில் அச்சிடப்பெற்ற இந்நூலின் முதற் பாகம் நான்கு பகுதிகளைக் கொண்டது. “அகச்சூழலின் மாறிலி நிலையின் சீராக்கம்” (கலமும் உடற்பாயிகளும், உடல்நீரும் உடற்பாயியும், குருதி), “இதயமும் சுற்றோட்டமும்” (பொது, மயிர்க்குழாய்ச் சுற்றோட்டம், நாளங்களும் நாள மீளடைவும், இதயத்தின் கட்டமைவும் இயல்புகளும், மனிதனில் இதய வெளியீட்டை அளவிடுதல், இதய வீதம், இதய மின்தொழிலியல், இதய கலனத் தொகுதியின் நரம்பாட்சி, தனித்திறன் பிரதேயங்க;டாகச் சுற்றோட்டம், உயர் குருதியமுக்கம்), “மூச்செடுத்தல் (சுவாசம்)” (மூச்செடுத்தலின் சீராக்கம், குருதியால் ஒட்சிசன் காவப்படல், உடலில் காபனீர் ஒட்சைட்டுக் கொண்டு செல்கை, மூச்செடுத்தலின் இரசாயன ஒழுங்காக்கம், இடர் மூச்சுயர்), “ஊறுநீரியும் உடற்பாயிகளின் சீராக்கமும்” (ஊறு நீரியின் கட்டமைவும் வினையங்களும், ஊறுநீரியால் நீர்ச் சமநிலையினதும் உடற்பாயிகளின் கூற்றமைவினதும் சீராக்கம், நோய் நிலையில் ஊறுநீரி வினையம், உணவுக்கால்வாய்ப் பிறழ்வுகள் உடற்பாயிகளுக்கு உறுத்தும் விளைவுகள்) ஆகிய பாடங்களாக இவை பிரிக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2829).

ஏனைய பதிவுகள்

14912 இரண்டெழுத்தில் இயங்கிவந்த இணையற்ற செயல்வீரன்.

மலர்க் குழு. கொழும்பு 13: எம்.சி.சுப்பிரமணியம் நினைவுக் குழு, 161-1/1, ஜிந்துப்பிட்டி வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2004. (கொழும்பு 13: யூ.கே. பிரின்டர்ஸ், 98 A, விவேகானந்த மேடு). 80 பக்கம், விலை:

14505 பரத நாட்டிய செய்முறைத் தாள விளக்கம்.

சிறீதேவி கண்ணதாசன். சுழிபுரம்: பொன்னாலை சந்திர பரத கலாலயம், பறாளாய் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2011, 1வது பதிப்பு, நவம்பர் 2007. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 672 B, காங்கேசன்துறை வீதி).

14782 பராரி கூத்துகள்.

இ.தியாகலிங்கம். சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன் கிரியேஷன்ஸ், 20/2, சக்காரியா காலனி, முதலாவது தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, ஜனவரி 2014. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன் கிரியேஷன்ஸ், 20/2, சக்காரியா

12125 – இறை மணி மாலை.

விழிசைச் சிவம் (இயற்பெயர்: செ.சிவசுப்பிரமணியம்). தெல்லிப்பழை: கலை இலக்கியக் களம், 1வது பதிப்பு, டிசம்பர் 1999. (யாழ்ப்பாணம்: போஸ்கோ பதிப்பகம், நல்லூர்). (8), 70 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 20×14.5 சமீ.

12127 – கந்த புராணக் கதைகளும் அவைகளுணர்த்தும் உண்மைநூற் கருத்தும்.

நவாலியூர் க.சோமசுந்தரப் புலவர். வட்டுக்கோட்டை: சைவ இனைளஞர் சங்கம், வட்டுக்கோட்டை சைவ ஆங்கில வித்தியாசாலை, 1வது பதிப்பு, 1939. (சங்கானை: சச்சிதானந்த அச்சியந்திரசாலை). (10), 84 பக்கம், விலை: 50 சதம், அளவு: 17.5×12.5

12783 – ஆனை கட்டிய அரியாத்தை (நாடகம்).

அகளங்கன் (இயற்பெயர்: நா.தர்மராஜா). வவுனியா: வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, மே 2017. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், இல. 85, கந்தசுவாமி கோவில் வீதி). 73 பக்கம், விலை: