14462 சுகமான விடியலை நோக்கி.

தொகுப்பாசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நீரிழிவு சிகிச்சை நிலையம், போதனா வைத்தியசாலை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2014. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்). (12), 361 பக்கம், விலை: ரூபா 250.00, அளவு: 20.5×14.5 சமீ. பல்வேறு துறைசார்ந்த வைத்திய அதிகாரிகளின் மருத்துவ சுகாதார அறிவியல் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்திருக்கும் இப்பாரிய மருத்துவக் கட்டுரைத் தொகுப்பில் “சுகாதார விடியலுக்காய்” என்ற முதலாவது பிரிவில் 36 கட்டுரைகளும், “குழந்தைகளை வளர்த்தெடுக்க” என்ற இரண்டாவது பிரிவில் 23 கட்டுரைகளும், “எம்மண்ணையும் சுற்றாடலையும் காத்திட” என்ற மூன்றாவது பிரிவில் 12 கட்டுரைகளும், “பெண்கள் பகுதி” என்ற நான்காவது பிரிவில் 13 கட்டுரைகளும், “எம்மைத் தற்காத்துக் கொள்ள” என்ற ஐந்தாவது பிரிவில் 25 கட்டுரைகளும், “ஆரோக்கியமாக உண்பதற்கு” என்ற ஆறாவது பிரிவில் 10 கட்டுரைகளும், “கேள்வி-பதில்” என்ற ஏழாவது பிரிவில் 6 கட்டுரைகளுமாக மொத்தம் 125 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இந்நூலின் தொகுப்பாசிரியர் குழுவில் வைத்தியத்துறையைச் சேர்ந்தவர்களான S.சிவன்சுதன், V.சுஜனிதா, R.பரமேஸ்வரன், P.செல்வகரன்,V.கஜேந்தினி, S.சகிலா, S.சுதாகரன், P.ஷாலின், S.கனிஸ்ரெலா, A.சர்மிளா, P.யோகநாதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஏனைய பதிவுகள்