14464 மாணவர் ஆரோக்கிய மேம்பாடு (பாடசாலை ஓர் ஆரோக்கிய மேம்பாட்டு நிலையம்).

கா.வைத்தீஸ்வரன். தெகிவளை: கா.வைத்தீஸ்வரன், ஆற்றுப்படுத்தல் நிலையம், 7, அல்பேர்ட் பிளேஸ், 1வது பதிப்பு, ஏப்ரல் 2013. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்). 160 பக்கம், விலை: ரூபா 325., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-97577-5-7. அதிபர், ஆசிரியர், சமூக சேவையாளருக்கான ஆரோக்கிய வழிகாட்டியாக வெளிவந்துள்ள நூல். மாணவர் சமூகத்துக்கு அடிப்படையான ஆரோக்கியத்தினால் ஏற்படும் முக்கிய பிரச்சினைகள், அந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்வதில் ஆசிரியர்களின் பங்களிப்பு இன்றைய ஆசிரியர்களின் நிலையில் எவ்வாறு உள்ளது என்று ஆராய்ந்துள்ளார். ஆரோக்கியத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வழிமுறை களான பழக்க வழக்கங்கள், எளிமையான நிறையுணவு, சுறுசுறுப்பான வாழ்க்கை, உடல் அப்பியாசம், மற்றவர் மேல் அன்பு பாராட்டுதல், உண்மை பேசுதல், திருப்தியுடன் வாழ்தல், ஆடம்பர வாழ்க்கையினால் ஏற்படும் உடற் பருமனை குறைத்தல், பொறாமை கொள்ளாதிருத்தல் எனப் பலவற்றைக் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களுக்குரிய ஆரோக்கியம் தொடர்பான 16 அத்தியாயங்களும், ஆசிரியர்களுக்கான ஆரோக்கியம் சம்பந்தமான ஐந்து அத்தியாயங்களும் உள்ளன. பாலியல் துஷ்பிரயோகம்-முகம் கொடுக்கும் வழிமுறைகள், உடற்பருமன் முற்றாகத் தவிர்ப்போம், Benefits of Deep Breathing, Medicine Cupboard, தடுப்பு மருந்து அட்டவணை ஆகிய நான்கு பின்னிணைப்புகளும் இறுதியில் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்