14466 ஆயிரம் வேரும் அருமருந்தும்.

கணபதிப்பிள்ளை விஸ்வலிங்கம். திருக்கோணமலை: சுதேச வைத்தியத் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2016. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி). 250 பக்கம், தகடுகள், புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-43218-1-6. மூலிகை, பழம், பட்டை, வேர், விதை ஆகியவை தொடர்பிலான 1000 சுதேச மருத்துவக் குறிப்புகளைக் கொண்ட மூலிகை வைத்திய நூல். மூலிகைகளின் தன்மைக்கேற்ப அவற்றை வகைப்படுத்தி இந்நூலில் விளக்கியுள்ளார். மட்டக்களப்பு திருப்பழுகாமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்நூலாசிரியர், கமநல சேவைத் திணைக்களத்தில் பயிர்ச்செய்கை உத்தியோகத்தராகவும் பின்னர் கிராம உத்தியோகத்தராகவும் முப்பது வருடங்களுக்கு மேல் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

ஏனைய பதிவுகள்

12935 – பத்மம் (பேராசிரியர் எஸ்.பத்மநாதன் சேவை நயப்பு மலர்).

இரா.வை.கனகரத்தினம். எஸ்.ராஜகோபால், ப.புஷ்பரட்ணம், வி.மகேஸ்வரன் (பதிப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பவானி பதிப்பகம், புத்தூர் கிழக்கு, புத்தூர், 1வது பதிப்பு, 2004. (சென்னை 600035: தமிழ் நிலம், 33, வேங்கடநாராயணன் சாலை, நந்தனம்). xxxx, 335 பக்கம்,

14738 அவனுக்குள் ஆயிரம் (நாவல்).

தினேஷ் ஏகாம்பரம். சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2018. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்). x,