கணபதிப்பிள்ளை விஸ்வலிங்கம். திருக்கோணமலை: சுதேச வைத்தியத் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2016. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி). 250 பக்கம், தகடுகள், புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-43218-1-6. மூலிகை, பழம், பட்டை, வேர், விதை ஆகியவை தொடர்பிலான 1000 சுதேச மருத்துவக் குறிப்புகளைக் கொண்ட மூலிகை வைத்திய நூல். மூலிகைகளின் தன்மைக்கேற்ப அவற்றை வகைப்படுத்தி இந்நூலில் விளக்கியுள்ளார். மட்டக்களப்பு திருப்பழுகாமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்நூலாசிரியர், கமநல சேவைத் திணைக்களத்தில் பயிர்ச்செய்கை உத்தியோகத்தராகவும் பின்னர் கிராம உத்தியோகத்தராகவும் முப்பது வருடங்களுக்கு மேல் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.