14467 சித்த மருத்துவம் 1985.

எஸ்.எல்.சிவசண்முகராஜா, பி.வி.விமலதாஸ் (இதழாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ மாணவர் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1985. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). (12), 40 + (28) பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ. யாழ் சித்த மருத்துவ மாணவர் ஒன்றியத்தால் இந்த இதழ் வெளியீடு செய்யப்பட்டது. முதலாவது இதழில், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி சு.வித்தியானந்தன் அவர்கள் வழங்கிய ஆசிச்செய்தி, யாழ்.பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி என்.பாலகிருஷ்ணன் அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி, யாழ்.பல்கலைக்கழகச் சித்த மருத்துவத்துறைத் தலைவர் டாக்டர் எஸ்.பவானி அவர்கள் வழங்கிய ஆசியுரை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பதிவாளர் திரு. வே.ந.சிவராசா அவர்கள் வழங்கிய ஆசியுரை, அன்பார்ந்த வாசகருக்கு என்ற தலைப்பில் மலர் ஆசிரியர் எஸ்.எஸ்.சிவசண்முகராஜா வழங்கிய உரை என்பன ஆரம்பப் பக்கங்களை ஆட்கொண்டுள்ளன. தொடர்ந்து வரும் பக்கங்களில், யாழ்.பல்கலைக் கழகச் சித்த மருத்துவத்துறை ஓர் அறிமுகம், சித்த மருத்துவ வளர்ச்சிக்கு ஆய்வுகள் அவசியம் (வைத்தியகலாநிதி எஸ்.பவானி), சித்தர்களும் சித்தமருத்துவமும் (கலாநிதி இ.பாலசுந்தரம்), கவிதைகள் தமிழன்னை வாழ்த்துகிறாள் (க.நாகேஸ்வரன்), சித்தர் பெருமை (அ.பிரேமா), ஆராய்ச்சி (ஸ்ரீகாந்தா அருணாசலம்), யோகாசனமும் உடல்நலமும் (என்.சியாமா), The Government and the Indigenous Systems of Medicine (K.Balasingham), Baby to be Born – Boy or Girl! (S.S.Sivashanmugarajah), How to Maintain Good Health? (T.Vasanthy), General Practice in a baffled and confused Community (S.S.Senathirajah), சித்தமருத்துவம் – ஒரு கண்ணோட்டம் (பா.விக்னவேணி), கர்ப்பிணிகளின் உணவு – நடைமுறைகள் பற்றிச் சித்தமருத்துவம் கூறுவதென்ன? (க.இராமசுவாமி), எமது நெஞ்சம் நிறைந்த நன்றிகள் (சித்த மருத்துவ மாணவர் மன்றம்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

14383 கல்வி பொதுத்தராதர பத்திரம் (உயர் தரம்) ஆண்டு 12-13: விலங்கியல் பாடத்திட்டம்.

தேசிய கல்வி நிறுவகம். மஹரகம: தொலைக்கல்வித் துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1995. (கொழும்பு: NIE Press). 26 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27×20 சமீ. 1995 தொடக்கம் ஆண்டு

14630 நெருநல் (கவிதைகள்).

இ.சு.முரளிதரன். யாழ்ப்பாணம்: மேதினிகா வெளியீடு, 34/3, செட்டித் தெரு, நல்லூர், 1வது பதிப்பு, ஜுன் 2015. (யாழ்ப்பாணம்: ஆகாயம் பதிப்பகம், இமையாணன், உடுப்பிட்டி). xii, 39 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 18×11.5

12457 – உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலயம் பவளவிழா மலர், 1915-1990.

பாடசாலை அபிவிருத்திச் சபை. உரும்பராய்: பாடசாலை அபிவிருத்திச் சபை, உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம், 1வது பதிப்பு, 1992. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). (30), 91 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18

14818 வெள்ளைச்சேலை: நாவல்.

கலையார்வன் (இயற்பெயர்: குருசுமுத்து இராயப்பு). யாழ்ப்பாணம்: ஜெயந்த் சென்டர், 165 வேம்படி வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2016. (பண்டத்தரிப்பு: ஜே.எஸ்.பிரிண்டர்ஸ்). xxiv, 216 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 400., அளவு: 22×15

14174 ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய சிறப்பு மலர்.

விசாகரத்தின ஐயர் தெய்வேந்திர ஐயர் (மலராசிரியர்). தொண்டைமானாறு: ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம், 2வது பதிப்பு, 2000, 1வது பதிப்பு, 2000. (கரவெட்டி: லெட்சுமி ஓப்செட் அச்சகம், நாவலர்மடம்). ii, 56 பக்கம், புகைப்படங்கள், தகடுகள்,

14430 நன்னூன் மூலமும் விருத்தியுரையும்.

சங்கரநமச்சிவாயப் புலவர் (விருத்தியுரை), சிவஞான சுவாமிகள் (திருத்தியவர்), ஆறுமுக நாவலர் (பரிசோதித்தவர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர், நல்லூர், மீள்பதிப்பு, ஐப்பசி 1947. (சென்னபட்டணம்: வித்தியாநுபாலன யந்திரசாலை). 292 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: