14475 லங்கா சித்த ஆயுள்வேத மருத்துவக் கல்லூரியின் 75ஆவது ஆண்டு பவளவிழா மலர் 1925-2000.

இதழாசிரியர் குழு. யாழ்ப்பாணம்: லங்கா சித்த ஆயுள்வேத மருத்துவக் கல்லூரி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2003. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டர்ஸ், 424, காங்கேசன்துறை வீதி). xx, 102 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ. இம்மலரின் இதழாசிரியர் குழுவில் க.குணராசா, என்.மணிவண்ணன், திருமதி ஜீ.புவனலோஜனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆசியுரை, வாழ்த்துரைகளுடன் சித்த ஆயுள்வேத மருத்துவக் கல்விப் பாரம்பரியம் (திருமதி இந்துராணி தர்மராஜா), மந்திரமும் தந்திரமும் மருந்தும் (அ.சண்முகதாஸ்), நிகழ்கால மருத்துவச் சமூகவியல் சிந்தனைகள் (என்.சண்முகலிங்கன்), சித்த வைத்தியமும் மக்களும் (செ.பரமசிவம்பிள்ளை), சுரம் என்றால் என்ன (வேடகுகமூர்த்தி), தெய்வீக ஆரோக்கியம் (சிவகுமாரி சிதம்பரப்பிள்ளை), ஒவ்வாமை நோய்கள் கிரந்தித் தோய்வும் தமக சுவாசமும் (பொ.சண்முகரத்தினம்), பொங்கு தமிழ் போல புகழ் பெறுக (ந.மணிவண்ணன்), சித்தாயுள் வேத சித்தாந்தங்கள் (திருமதி.க.பரமசிவம்), நல வாழ்வின் பரிமாணங்கள் (நாகேஸ்வரி நாகலிங்கம்), பெரும் பாட்டு ரோகமும் அதன் சிகிச்சை முறைகளும் (சாந்தினி செல்வராஜா), உளச்சிதைவு நோய் (மொழிபெயர்ப்பு: ஜி. ராஜேந்திரம்), புற்று நோய் (இதயராஜி பாலசுப்பிரமணியம்), இலங்கை மருத்துவ முறை (சண்முகரத்தினம் பிஹேமனந்தி), இயற்கை மரணம் (புவனலோஜினி ஜீவானந்தம்), திருக்குறளில் மனித மேம்பாடு பற்றிய சில சிந்தனைகள் (சோபனா வேணுகோபாலசர்மா), ஆடாதோடை (கஜீபா புஷ்பராஜா), மலருக்குள் மறைந்திருக்கும் மொட்டுக்கள் (க.இராசதேவி), குறிக்கோளை நோக்கி (கிருஷாந்தி), மருத்துவத்தில் பனை நுங்கு (பனைச்செல்வம்), வர்மக்கலை -மர்மக்கலை / நரம்படிக்கலை (செல்வம் ஜே.ஜெயலன்), கடிவளம் (ந.நகுலரசி), எயிட்ஸ் என்றால் என்ன (நா.சிவராதிரன்), உடல் பருமன் (யோ.காயத்ரி), நவீன காலணிகளால் ஏற்படும் பாதிப்புக்கள் (நிஷா நித்தியானந்தன்), மூலிகைகளும் அதன் மருத்துவமும் (இ.வசந்தராஜ்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31486).

ஏனைய பதிவுகள்

32red Asia Local casino Review

Posts This can be My Second Remark To possess 32red – casino promotions deposit 5 get 25 Ed Poker Bonuses And you will Promotions Pro