14479 செய்முறை முகாமைத்துவ கைநூல்: இலங்கையின் கிராமிய, நகர, மக்கள் அமைப்புகளுக்காக: தொகுப்பு 1- அமைப்பு, நிர்வாகம், தொடர்பு முறைகள்.

பிரனாந் வின்செட். இராஜகிரிய: இரெட் வெளியீடு, ஆசிய பங்காளருக்கான இரெட் அபிவிருத்தி சேவை, இல.562/3, நாவல வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 1995. (கொழும்பு: கருணாதாச அச்சகம்). iv, 57+(99) பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5 சமீ. இரெட் தலைமைச் செயலாளர் பிரனாந் வின்செட்டின் நூலிலிருந்து முக்கிய பகுதிகளை இப்பிரசுரம் கொண்டுள்ளது. இதில் சங்கத்தின் ஆரம்பமும் அதன் அபிவிருத்தியும், உற்சாகத்துடன் கடமையாற்றுதலும் பங்குபற்றுதலும், சுற்றாடற் கல்வி, திட்டமிடலும் மற்றும் வேலைத்திட்டம் தயாரித்தல் பற்றிய திட்டம் தயாரித்தல், நடைமுறைப்படுத்தும் திட்டமும் அதன்பின் வரும் நடைமுறைகளும், கல்வி, செய்திகள் மற்றும் செய்திகளை பதிவுசெய்தல், தொலைத்தொடர்பு முறைகள் ஆகிய ஏழு பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்புகளாக 99 பக்கங்களில் மாதிரிப் படிவங்களும், வேலைத்திட்டத்திற்கு பயன்படும் பிற ஆவணங்களும் வகை மாதிரிகளாகத் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்