T.குகதாஸ், S.றஸ்மி (இதழாசிரியர்கள்). கொழும்பு 12: தமிழ்மொழி மூல பயிற்சிபெற்ற பட்டதாரிகள், கொழும்பு கச்சேரி, டாம் வீதி, 1வது பதிப்பு, 2004. (கொழும்பு 6: டெக்னோ பிரின்டர்ஸ், 581, 2/1, காலி வீதி, வெள்ளவத்தை). 64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ. பட்டதாரிகளின் பயிற்சியும் பயிலுநர்களும் (மா.கணபதிப்பிள்ளை), நினைவுகளை நிரந்தரமாக்கிட, முகங்களின் முகவரிகள், இன்றைய கல்வி முறையும் வேலைவாய்ப்பும் (சித்தீக் றஸ்மி), நெஞ்சத்து நினைவுகள் கவித்துளிகளாக ஆகிய ஐந்து தலைப்புகளின் கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. தமிழ்மொழிமூலம் நிர்வாகப் பயிற்சியை பெற்றுக்கொள்ள அனுப்பப்பட்ட பயிலுநர்கள் தமது சகபாடிகளின் மலரும் நினைவுகளுடன் தயாரித்துப் பகிர்ந்துகொண்ட ஒரு சிறப்பிதழ் இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 36188).