இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, 35ஆவது மாடி, மேற்குக் கோபுரம், உலக வர்த்தக நிலையம், எக்சலன் சதுக்கம், இலங்கை வங்கி மாவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 1996. (கொழும்பு 12: ஜே அன்ட் எஸ். சேர்விஸஸ் அச்சகம், 115 மெசெஞ்சர் வீதி). (30), 292 பக்கம், lxi, xxiii, cxxix, 111 அட்டவணைகள், விலை: ரூபா 100.00, அளவு: 27×20 சமீ. நாணய விதிச் சட்டத்தின் (அத்தியாயம் 422) 35ஆம் பிரிவானது பொருளாதார நிலைமை, மத்திய வங்கியின் நிலைமை மற்றும் நாணயச் சபையினால் மேற்கொள்ளப்பட்ட கொள்கைகள், வழிமுறைகள் என்பன பற்றிய ஆய்வு மீதான ஆண்டறிக்கையை ஒவ்வொரு நிதியாண்டும் முடிவடைந்து நான்கு மாதங்களுக்குள் மத்திய வங்கியின் நாணயச்சபை நிதி திட்டமிடல் அமைச்சுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. அவ்வகையில் 47ஆவது ஆண்டறிக்கையாகத் தயாரிக்கப்பட்ட 1996ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை இதுவாகும்.