14486 பொது முதலீடு 1990-1994.

கொள்கை திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சு. கொழும்பு: தேசிய திட்டமிடல் திணைக்களம், கொள்கை திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1990. (கொழும்பு 12: குமரன் பதிப்பகம், 201, டாம் வீதி). (4), 157 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ. பொது முதலீட்டுத் திட்ட வரிசையில் வெளியிடப்படும் 1990-1994ஆம் ஆண்டுக்கான இந்த வெளியீடு, இலங்கையின் பொருளாதாரம் புதுப்பிக்கப்பட்ட இயக்க ஆற்றலை வெளிப்படுத்தும் ஒரு காலப்பகுதியில் முன்வைக்கப்படுகின்றது. அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கான அரசாங்கத்தின் முழுமையான பொருளாதார உபாயத்தையும் கொள்கைகளையும் நிகழ்ச்சித் திட்டங்களையும் இவ்வறிக்கை விளக்குகின்றது. இது பொருளாதார கண்ணோட்டமும் செயற்பாடும், அரச துறையினது மறுசீரமைப்பு, பொது முதலீட்டு நிகழ்ச்சித் திட்டம் 1990-1994 ஆகிய மூன்று அத்தியாயங்களையும் அதைத் தொடர்ந்து அரச மூலதனச் செலவின ஒதுக்கீடு 1990-1994 அறிக்கையையும் கொண்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23613).

ஏனைய பதிவுகள்