ஜெகத் வீரசிங்க (பிரதம ஆசிரியர்), அனோலி பெரேரா (முகாமைத்துவ ஆசிரியர்), ஆனந்த திஸ்ஸகுமார, தா.சனாதனன், பாக்கியநாதன் அகிலன். கொழும்பு: தீர்த்த சர்வதேச கலைஞர்களின் கூட்டிணைப்பு, இணை வெளியீடு, ஹ{வோஸ் நிறுவனம், 1வது பதிப்பு, 2004. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 672 B, காங்கேசன்துறை வீதி). 117 பக்கம், புகைப்படங்கள், ஓவியங்கள், விலை: ரூபா 250., அளவு: 20×14.5 சமீ., ISBN: 1800-0320. இவ்வாய்விதழ் அரையாண்டிதழாக 2004 முதல் தமிழில் சில இதழ்கள் வெளியிடப்பட்டன. கலை மற்றும் பேறு தொடர்பான வெளியீட்டு வரிசை கட்டுரைத் தொகுதி என்ற வகையில் இது தமிழில் முன்னோடி முயற்சியாகும். இவ்விதழில் சமகாலக் கலை, ஆடை அலங்காரக் கலை, கைப்பணி, கட்டடக் கலை, அரும்பொருளகவியல், தொல்பொருளியல், பேறு முகாமை மற்றும் பேறு முகாமைத்துவம், போன்ற துறைசார் படைப்பாக்கங்கள் இச்சஞ்சிகையில் இடம்பெற்று வந்தன. இவ்விதழில் இலங்கையில் சமகாலக் காண்பியக் கலை நடைமுறைகளும் தொண்ணூறுகளின் போக்கும் (ஜெகத் வீரசிங்க), கலைஞனின் சுதந்திரம் பேரத்திற்குரிய தன்னுரிமையா? (அனோலி பெரேரா), தீர்த்த சர்வதேச கலைஞர்களின் பட்டறை 2003 (ஜெகத் வீரசிங்க, அனோலி பெரேரா), தீர்த்த சர்வதேச கலைஞர்களின் பட்டறை 2003 (அசங்க பெரேரா), நெசவு (சீ.ஞானராஜ்), யாழ்ப்பாணத்து 13 ஓவியர்களின் ஓவியங்களின் காட்சி (தர்ஷினி விக்னமோகன்) ஆகிய ஆறு ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. எழுத்தாளர்கள் தொடர்பான தகவல்கள் இதழின் இறுதியில் தரப்பட்டுள்ளன.