14488 ஆர்ட் லாப் (Art Lab) இதழ் 1.

ஜெகத் வீரசிங்க (பிரதம ஆசிரியர்), அனோலி பெரேரா (முகாமைத்துவ ஆசிரியர்), ஆனந்த திஸ்ஸகுமார, தா.சனாதனன், பாக்கியநாதன் அகிலன். கொழும்பு: தீர்த்த சர்வதேச கலைஞர்களின் கூட்டிணைப்பு, இணை வெளியீடு, ஹ{வோஸ் நிறுவனம், 1வது பதிப்பு, 2004. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 672 B, காங்கேசன்துறை வீதி). 117 பக்கம், புகைப்படங்கள், ஓவியங்கள், விலை: ரூபா 250., அளவு: 20×14.5 சமீ., ISBN: 1800-0320. இவ்வாய்விதழ் அரையாண்டிதழாக 2004 முதல் தமிழில் சில இதழ்கள் வெளியிடப்பட்டன. கலை மற்றும் பேறு தொடர்பான வெளியீட்டு வரிசை கட்டுரைத் தொகுதி என்ற வகையில் இது தமிழில் முன்னோடி முயற்சியாகும். இவ்விதழில் சமகாலக் கலை, ஆடை அலங்காரக் கலை, கைப்பணி, கட்டடக் கலை, அரும்பொருளகவியல், தொல்பொருளியல், பேறு முகாமை மற்றும் பேறு முகாமைத்துவம், போன்ற துறைசார் படைப்பாக்கங்கள் இச்சஞ்சிகையில் இடம்பெற்று வந்தன. இவ்விதழில் இலங்கையில் சமகாலக் காண்பியக் கலை நடைமுறைகளும் தொண்ணூறுகளின் போக்கும் (ஜெகத் வீரசிங்க), கலைஞனின் சுதந்திரம் பேரத்திற்குரிய தன்னுரிமையா? (அனோலி பெரேரா), தீர்த்த சர்வதேச கலைஞர்களின் பட்டறை 2003 (ஜெகத் வீரசிங்க, அனோலி பெரேரா), தீர்த்த சர்வதேச கலைஞர்களின் பட்டறை 2003 (அசங்க பெரேரா), நெசவு (சீ.ஞானராஜ்), யாழ்ப்பாணத்து 13 ஓவியர்களின் ஓவியங்களின் காட்சி (தர்ஷினி விக்னமோகன்) ஆகிய ஆறு ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. எழுத்தாளர்கள் தொடர்பான தகவல்கள் இதழின் இறுதியில் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

12754 – இலக்கிய விழா 1995: சிறப்பு மலர்.

மலர்க் குழு. திருக்கோணமலை: வடக்கு கிழக்கு மாகாண கல்வி, கலாசார அலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு, 1வது பதிப்பு, ஜுலை 1995. (அச்சக விபரம் தரப்படவில்லை). (10), 40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27

12165 – பஜனானந்தம்: திவ்ய த்ரிமூர்த்திகளுக்கு சமர்ப்பணம்.

ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன். கொழும்பு 6: ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் ஆச்ரமம், இலங்கைக் கிளை, 40, ராமகிருஷ்ண வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, மார்ச் 2002. (கொழும்பு: யுனிவோக்கர்ஸ் பிரின்டிங் வேர்க்ஸ்). (6), 130

14991 தென்னிலங்கை பிராமிக் கல்வெட்டுகளில் இந்து சமயமும், தமிழும்.

என்.கே.எஸ். திருச்செல்வம். கொழும்பு 5: அருந்ததி பதிப்பகம், 68/14, ஸ்ரீ சித்தார்த்த வீதி, 1வது பதிப்பு, நொவெம்பர் 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). ஒஒ, 212

14581 எதனை வேண்டுவோம்: கவிதைத் தொகுதி.

சுமதி குகதாசன். கொழும்பு 6: ஆர். ஜனாதன், 28, 4/2, பசல்ஸ் லேன், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2013. (கொழும்பு 6: ஆர்.எஸ்.டி. என்டர்பிரைசஸ், 114, W.A.சில்வா மாவத்தை). (18), 19-77 பக்கம், விலை:

14212 திருவாசகத்தில் சிவபுராணம்: இனிய இலகு தமிழ் உரைநடையுடன்.

சரோஜினிதேவி சிவஞானம் (உரையாசிரியர்). திருக்கோணமலை: திருமதி சரோஜினிதேவி சிவஞானம், தேவி கடாட்சம், 42டீஃ1, தேன் தமிழ் வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, 2018. (திருக்கோணமலை: ஏ.ஆர். டிரேடர்ஸ், திருஞானசம்பந்தர் வீதி). 206 பக்கம், விலை:

12772 – ஆயிரம் கவிஞர்கள் கவிதைகள் (32 நாடுகள் 1098 கவிஞர்கள்).

யோ.புரட்சி (தொகுப்பாளர்), யமுனா நித்தியானந்தன் (பதிப்பாசிரியர்). முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், விசுவமடு, 1வது பதிப்பு, ஜனவரி 2017. (கொழும்பு 13: சாய் அச்சகம், இல. 2, இரட்ணம் வீதி). 1861 பக்கம், புகைப்படங்கள்,