ஜெகத் வீரசிங்க (பிரதம ஆசிரியர்), அனோலி பெரேரா (முகாமைத்துவ ஆசிரியர்), ஆனந்த திஸ்ஸகுமார, தா.சனாதனன், பாக்கியநாதன் அகிலன் (ஆசிரியர் குழு). கொழும்பு: தீர்த்த சர்வதேச கலைஞரகளின் கூட்டிணைப்பு, இணை வெளியீடு, ஹுவோஸ் நிறுவனம், 1வது பதிப்பு, 2005. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 672 B, காங்கேசன்துறை வீதி). 117 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 21.5×18 சமீ., ISBN: 1800-0320. இவ்வாய்விதழ் அரையாண்டிதழாக 2004 முதல் தமிழில் வெளியிடப்பட்டது. கலை மற்றும் பேறு தொடர்பான வெளியீட்டு வரிசை கட்டுரைத் தொகுதியாகும். சமகாலக் கலை, ஆடை அலங்காரக் கலை, கைப்பணி, கட்டடக் கலை, அரும்பொருளகவியல், தொல்பொருளியல், பேறு முகாமை மற்றும் பேறு முகாமைத்துவம், போன்ற துறைசார் படைப்பாக்கங்கள் இங்கு இடம்பெறுகின்றன. இவ்விதழில், பதிப்பாசிரியர் குறிப்பு (ஜெகத் வீரசிங்க), “கலை வரலாறுகளில் பெண்ணியத் தலையீடு (கருத்தாடல்- கிறிஸில்டா பொலக்)”, “இலங்கைப் பெண் கலைஞர்கள்: பெண்களது சுமைதாங்கிகளா?” (அனோலி பெரேரா), “திரிசங்கு வெளி: காலனிய கொழும்பில் பெண் படைப்பாளிகள்” (தா.சனாதனன்), “காட்சிப் புலத்தில் பாலியல்பு: சிகிரிய சுவரோவியங்களுக்கு உடையணிவித்தல்” (மாலதி டி அல்விஸ்), “காண்பியமாக்கப்பட்ட பெண் உடல்: ஜோர்ஜ் கீற்றின் ஓவியங்களில் மரபும் நவீனத்துவமும்” (தா.சனாதனன்), “யாழ்ப்பாணக் காட்சிப் பண்பாட்டில் பெண் அழகு: யாழ்ப்பாணக் கடைகளின் விளம்பரப் பலகைகளை மையமாக கொண்ட ஓர் வாசிப்பு” (சுதர்சினி விக்கினமோகன்) ஆகிய ஆக்கங்கள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன.