14490 ஆர்ட் லாப் (Art Lab) இதழ் 3-4.

ஜெகத் வீரசிங்க (பிரதம ஆசிரியர்), அனோலி பெரேரா (முகாமைத்துவ ஆசிரியர்), ஆனந்த திஸ்ஸகுமார, தா.சனாதனன், பாக்கியநாதன் அகிலன் (ஆசிரியர் குழு). கொழும்பு: தீர்த்த சர்வதேச கலைஞரகளின் கூட்டிணைப்பு, இணை வெளியீடு, ஹுவோஸ் நிறுவனம், 1வது பதிப்பு, 2005. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 672 B, காங்கேசன்துறை வீதி). 117 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 21.5×18 சமீ., ISBN: 1800-0320. இவ்வாய்விதழ் அரையாண்டிதழாக 2004 முதல் தமிழில் வெளியிடப்பட்டது. கலை மற்றும் பேறு தொடர்பான வெளியீட்டு வரிசை கட்டுரைத் தொகுதியாகும். சமகாலக் கலை, ஆடை அலங்காரக் கலை, கைப்பணி, கட்டடக் கலை, அரும்பொருளகவியல், தொல்பொருளியல், பேறு முகாமை மற்றும் பேறு முகாமைத்துவம், போன்ற துறைசார் படைப்பாக்கங்கள் இங்கு இடம்பெறுகின்றன. இவ்விதழில், பதிப்பாசிரியர் குறிப்பு (ஜெகத் வீரசிங்க), “கலை வரலாறுகளில் பெண்ணியத் தலையீடு (கருத்தாடல்- கிறிஸில்டா பொலக்)”, “இலங்கைப் பெண் கலைஞர்கள்: பெண்களது சுமைதாங்கிகளா?” (அனோலி பெரேரா), “திரிசங்கு வெளி: காலனிய கொழும்பில் பெண் படைப்பாளிகள்” (தா.சனாதனன்), “காட்சிப் புலத்தில் பாலியல்பு: சிகிரிய சுவரோவியங்களுக்கு உடையணிவித்தல்” (மாலதி டி அல்விஸ்), “காண்பியமாக்கப்பட்ட பெண் உடல்: ஜோர்ஜ் கீற்றின் ஓவியங்களில் மரபும் நவீனத்துவமும்” (தா.சனாதனன்), “யாழ்ப்பாணக் காட்சிப் பண்பாட்டில் பெண் அழகு: யாழ்ப்பாணக் கடைகளின் விளம்பரப் பலகைகளை மையமாக கொண்ட ஓர் வாசிப்பு” (சுதர்சினி விக்கினமோகன்) ஆகிய ஆக்கங்கள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

14166 மத்திய மாகாண இந்து மாநாட்டுச் சிறப்பு மலர் -2003.

துரை. மனோகரன் (மலராசிரியர்). கண்டி: மத்திய மாகாணக் கல்வி இந்து கலாச்சார அமைச்சு, 1வது பதிப்பு, 2003. (கண்டி: கிராப்பிக் லாண்ட்). x, (2), 85 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18

12205 – சமூகக் கல்வியும் வரலாறும்: 11ஆம் தரம்.

ஆசிரியர் குழு. கொழும்பு: தேசிய கல்வி நிறுவகம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இசுறுபாயா, பத்தரமுல்ல, 1வது பதிப்பு, 2000. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்). viii, 177 பக்கம், சித்திரங்கள், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,