14492 சுருதி 1996.

மலர்க் குழு. மட்டக்களப்பு: மட்டக்களப்பு விபுலாநந்த அடிகள் இசை நடனக் கல்லூரி, நொச்சிமுனை, 1வது பதிப்பு, 1996. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம், அரசடி). (10), 52 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ. இவ்வாண்டு மலரில் இசை விளக்கமும் கிழக்கு மாகாணத்தில் தற்கால இசை வளர்ச்சியும் (சங்கீத பூசணம் என்.ராஜு), ஆகம நூல்களும் சங்கீதமும் (பாலாம்பிகை இராஜேஸ்வரன்), சுவாமி விபுலாநந்தரின் இசைப்பணி (பாரதி குணரெத்தினம்), முத்துஸ்வாமி தீட்ஷிதர் (ச.யோகேஸ்வரி), கலைகளுள் இசைக் கலை (கே. றூபாஜினி), சங்கீத சாகரத்தில் மூழ்கித் திளைத்த அன்னாள் (வே.கணபதிப்பிள்ளை), முத்தமிழ் இலக்கியமும் கலையும் (குமுதினி கதிர்காமத்தம்பி), நாட்டியத்திற்கு விருந்தளிக்கும் அபிநயங்கள் (சசிகலாராணி பேரின்பநாயகம்), இசை (சரோஜினி இராஜேஸ்வரன் பாய்வா), பாமர இசை (ஞா.கலைச்செல்வி), இசைக்கலை ஓர் நோக்கு (கமலா ஞானதாஸ்), ஆளுமை விருத்திக்கு அழகியற்கலையின் பங்கு (இ.தெட்சணாமூர்த்தி) ஆகிய பன்னிரு ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இதழ் வெளியீட்டுக்குழுவில் சரஸ்வதி சுப்பிரமணியம், பிரியதர்சினி ஜெகதீஸ்வரன், ம.சுகந்தி, தெ.பிரதீபன், சு.அகிலேஸ்வரி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 32280).

ஏனைய பதிவுகள்

Best 5 Deposit Bonuses Uk

Blogs Online casino Inside the India With Real money Revolves Frequently asked questions In the 100 percent free Spins No deposit Mystake Gambling enterprise Gets