14494 கவின்கலைகளில் சித்திரக்கலை: க.பொ.த.(சாதாரண)தரம் 7-11.

ஞா.ஞானதயாளன். கொழும்பு 6: தென்றல் பப்ளிக்கேஷன்ஸ், 135, கனல்பாங்க் வீதி, 1வது பதிப்பு, ஆவணி 2003. (சென்னை 600001: மாணவர் மறுதோன்றி மையம்). viiiஇ 182 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 28×22 சமீ., ISBN: 955-8621-56-0. நூலாசிரியர் வவுனியா கல்வித் திணைக்களத்தின் கல்வி வள (சித்திரக்கலை) ஆலோசகராகப் பணியாற்றுபவர். இந்நூலில் வர்ணச்சக்கரம், ஒளியும் நிழலும், அச்சுப் பதித்தல், தூரதரிசனம், பரவுருவச் சித்திரம், அலங்கார மாதிரி வடிவங்கள், கொலாஜ் சித்திரம் (ஒட்டுச் சித்திரம்), மொசாக் முறை, ஆரம்பகாலச் சித்திரக்கலை, அலங்கார வகைகள், இலங்கையின் கட்டிடக்கலை, இலங்கையின் சிற்ப வளர்ச்சி, தாதுகோபுரத்தின் வடிவங்கள், தாதுகோபுரத்தின் வாயிற்படி மாதிரி வடிவம், அநுராதபுரக் காலச் சந்திரவட்டக்கல், பொலநறுவைக்கால சந்திரவட்டக்கல், கண்டிக்கால சந்திரவட்டக்கல், காவற்சிலை (அநுராதபுரக் காலம்), காவற்சிலை (பொலநறுவைக் காலம்), சிற்பத்தூண்கள் (போதிகை), இலங்கையில் உள்ள புராதன சுவர் ஓவியங்கள், அநுராதபுரக் கால ஒவியங்கள், சிகிரியாச் சுவர் ஓவியங்கள், பொலநறுவைக்கால ஓவியங்கள், கல்விகாரை ஓவியங்கள், இலங்காதிலக சிற்பக்கூடம், திம்புலாகலை கற்குகை சுவர் ஓவியங்கள், கண்டியுகத்தின் சித்திரங்கள், தெகல்தொருவை, தம்புல்ல குகை ஓவியங்கள், தலதா மாளிகை ஓவியங்கள், பமரகல விகாரைச் சித்திரம், முல்கிரிகலை விகாரை, கடலதெனிய விகாரை ஒவியம், அமரர் ஏ.ஜீ.சீ.எஸ்.அமரசேகர, அமரர் எம். சார்லிஸ், ஜோர்ஜ் கீற், ஜே.டீ.ர.பெரேரா, எல்.டீ.பீ.மஞ்சுரி, டபிள்யூ.ஜே.ஜீ.பீலீன், ஜஸ்டின் தரணியகல, டேவிட் பேன்டர், ரிசட் கப்ரியேல், தற்காலச் சிலைகள், மறுமலர்ச்சிக் காலம், ஐரோப்பியர் வரலாறு, எகிப்தியர் கலை, கிரேக்க கலை, உலகப் பிரசித்திபெற்ற ஓவியர்கள், ஐரோப்பிய கலைக் காலங்களில் குகைச் சித்திரங்களில் காணப்படும் குகைகள், சாஞ்சி தாதுகோபுரம், குகை விகாரைகள், ஹரப்பா மொஹஞ்சதாரோ கலைப் படைப்புக்கள், சாரநாத் புத்தர் சிலை, அஜந்தா ஓவியம், எல்லோரா குகை ஓவியம், பார்க் குகை ஓவியம், தாஜ்மஹால், சங்கமித்தை வெள்ளரசு கொண்டுவரும் காட்சி, அலங்காரச் சித்திரம், சுயாதீனமான ரேகைச் சித்திரமும் வரைதலும், களனி விகாரையின் ஓவியங்கள், கோதமி விகாரையின் ஓவியங்கள், கண்டி திருத்துவக் கல்லூரி ஆலயத்தின் ஓவியங்கள், பொரல்ல சகல அர்ச்சிஸ்டர் ஆலயததின் ஓவியங்கள், நவீன ஓவியக் கலையின் நிகழ்வுகள், கம்பளைக் கால மரச் செதுக்கல்கள், அவுக்கண புத்தர் சிலை, தொலுவில புத்தர் சிலை, சமாதி புத்தர் சிலை, கந்தக சைத்திய, மகரதோரணம், கல்விகாரை பொலநறுவை, கொரவக்கல் (கைபிடிக்கல்), பொலநறுவைக் காலம், புத்தரின் முத்திரைகள், இந்துமத திருக்கோவிலின் கர்ப்பக்கிரக அமைப்பு, இந்து ஆலயக் கோபுரம், நடராஜர் வடிவம், கிராமியக் கைத்தொழில், இலங்கை ஓவியர்கள் ஆகிய 79 பாடங்களில் இந்நூல் விளக்கி எழுதப்பட்டுள்ளது. இறுதியில் கடந்தகாலப் பரீட்சை வினாக்கள் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Black-jack For fun On the internet

Articles Gamble Online Blackjack Online game In the Personal Gambling enterprises Black-jack Game Variations Disponibilidad De Juegos De Blackjack En Directo A to Z Counting