14496 காலவரை காட்டூன்கள்.

செல்வன் (இயற்பெயர்: எஸ்.தர்மதாஸ்). சுன்னாகம்: நர்த்தனவர்ணா கலையகம், மானிப்பாய் வீதி, உடுவில், 1வது பதிப்பு, ஐப்பசி 2019. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). xiv, 250 பக்கம், கருத்தோவியங்கள், விலை: ரூபா 3000., அளவு: 30×21.5 சமீ., ISBN: 978-624-95633-0-8. ஈழநாடு பத்திரிகையில் கார்ட்டூனிஸ்டாகத் தொடங்கிய தர்மதாசின் கலைப்பயணம் ஈழநாதம், உதயன், சுடரொளி, வீரகேசரி, தாய்வீடு, ஐபீ.சீ. தமிழ், புது விதி, தீபம், சமகளம் எனப் பல்வேறு தளங்களில் விரிவுகண்டுள்ளது. தான் வரைந்த 250 கருத்தோவியங்களை வண்ணப் படைப்புகளாக இந்த நூலில் பக்கத்துக் கொன்றாகத் தொகுத்துத் தந்துள்ளார். இன்று எமது மண்ணினதும் மக்களினதும் வாழ்வியல் இயக்கத்தை வரையறை செய்ய முயலும் வரைமுறையற்ற அரசியலால் தடம் பிடித்து தம் வசதிக்கேற்ப மேடென்றும், பள்ளமென்றும் பாராது இழுத்துச் செல்லும் அரசியல்வாதிகளை செல்வன் தனது குறும்புத்தனம் செய்யும் கோடுகளால் கோமாளிகளாக நையாண்டி செய்து, அதனூடாக மக்களை சிந்தித்து செயற்படத் தூண்டும் முறை ரசனைக்குரியது. இவரது தூரிகையின் இலாவகமான அசைவுகளினால் பதியும் கோடுகளுள் சிக்கிக்கொள்ளும் அரசியல்வாதிகள், சமூகத் தலைவர்களின் குணாதிசய இயல்புகளின் வெளிப்பாடுகளே இவரது வெற்றிகரமான கேலிச்சித்திரங்களின் முக்கியத்துவமாகும்.

ஏனைய பதிவுகள்