தெ.ஈஸ்வரன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: அருள்மிகு வரதராஜப் பிள்ளையார் கோவில், கொட்டாஞ்சேனை, 1வது பதிப்பு, ஜனவரி 1995. (சென்னை 600002: மறவன்புலவு க.சச்சிதானந்தன், காந்தளகம், 68 (834) அண்ணாசாலை). 80 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 13×21 சமீ. கொட்டாஞ்சேனை அருள்மிகு வரதராஜப் பிள்ளையார் கோவிலில், நடைபெறும் பண்ணிசை வகுப்புகளில் பயன்படுத்தும் நோக்கில் த.நீதிராஜா, தெ.ஈஸ்வரன், பொ.பாலசுந்தரம் ஆகியோரின் முயற்சியால் உருவாக்கப்பட்ட இந்நூலுக்கான முக்கிய பங்களிப்பினையும் ஆலோசனையையும் சென்னை இசையாசிரியை திருமதி செ.சுப்புலட்சுமி, சென்னை சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் வித்துவான் இரா.அம்பை சங்கரனார், இசைமாமணி தருமபுரம் ப.சுவாமிநாதனார் ஆகியோர் வழங்கியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 35838).