14501 பஞ்ச கதிகள்.

நல்லை க.கண்ணதாஸ். யாழ்ப்பாணம்: ஏழிசை வெளியீட்டகம், ஏழிசை மிருதங்க நர்த்தனாலயம், 203, புங்கன்குளம் வீதி, அரியாலை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2019. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்). vi, (4), 221 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 25×18.5 சமீ., ISBN: 979-0-9006505- 0-4. பஞ்ச கதிகள் என்ற இந்நூல், ஆதிதாளம், ரூபகதாளம் ஆகியவற்றில் பஞ்ச கதியிலும் பாடங்கள் அமைக்கப்பட்டும், தனித்தனியாகவும், பஞ்சகதிகள் கலந்தும் வரும் தனியாவர்த்தனங்கள் அமைக்கப்பட்டும் வெளிவருகின்றது. இவை அனைத்தும் லயக் கணித ரீதியாகக் கணிக்கப்பட்டு, தாளக் குறியீடுகளில் எழுதப்பட்டும் இருக்கின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசை நடனத்துறை, மட்டக்களப்பு விபுலானந்தா அழகியற் கற்கைகள், நிறுவக இசை, நடனத்துறை, வட இலங்கை சங்கீத சபையின் ஐந்தாம் ஆசிரியர் தர மாணவர்களுக்கும், அனைத்துலகத் தமிழ்க் கலை நிறுவகத்தின் ஆற்றுகைத்துறை மிருதங்க மாணவர்களுக்கும் லயத்துறை ஆற்றுகையாளர்களுக்கும் உகந்த வகையில் எழுதப்பட்டுள்ளது. மிருதங்க கலா வித்தகர், இசைமாணி, நல்லை க.கண்ணதாஸ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையின் மிருதங்க ஆசானாவார்.

ஏனைய பதிவுகள்

13269 மலையகம்: பல்பக்கப் பார்வை: அமரர் இர.சிவலிங்கம் ஞாபகார்த்த நினைவுப் பேருரைகள்.

தை. தனராஜ் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: அமரர் இர. சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழு, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xxii, 564 பக்கம், விலை: ரூபா