த.விவேகானந்தராஜா (நேர்கண்டவர்). மட்டக்களப்பு: மூன்றாவது கண், உள்ளூர் அறிவுத்திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழு, இல.30, பழைய வாடிவீட்டு வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி). 48 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ. கிழக்குப் பல்கலைக்கழக நாடகத் துறை விரிவுரையாளர் த.விவேகானந்தராசா அவர்கள் சீலாமுனையைச் சேர்ந்த கூத்துக் கலைஞர் சி.விஜேந்திரன் அவர்களுடன் உரையாடித் தொகுத்த நேர்காணல் தொகுப்பு நூல். இந்நூல் அரங்க அறிவியல் வரலாற்றில் பாரம்பரியக் கலைஞர்களை பாமரர்கள், படிப்பறிவற்றவர்கள் என்று காலனித்துவ அறிவு ஓரங்கட்டியுள்ள பின்னணியில், பாரம்பரியக் கலைஞர்களின் வல்லமையினையும், சீலாமுனையில் நிகழ்ந்த கூத்து மீளுருவாக்கச் செயற்பாட்டின் முக்கியத்துவத்தினையும் வெளிக்காட்டுவதாக உள்ளது. சின்னையா விஜேந்திரன் அவர்கள் மட்டக்களப்பு சீலாமுனைக் கிராமத்தின் வடமோடிக் கூத்துப் பாரம்பரியத்தில் சிறு வயதிலிருந்தே மிகுந்த ஈடுபாட்டுடன் பங்குகொண்டு வருகின்ற மூத்த கூத்துக் கலைஞர்களுள் ஒருவர். கூத்துக் கலையில் தேர்ச்சிமிக்க விஜேந்திரன், சீலாமுனைக் கூத்துப் பாரம்பரியத்தின் கூத்து ஆட்ட முறைகளை அடுத்த தலைமுறையினருக்கு பயிற்றுவித்து வருபவர்.
How to Spot Fake Interac Casinos
Auto-generated excerpt