யோ.யோண்சன் ராஜ்குமார், வைதேகி செல்மர் எமில் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, டிசெம்பர் 2017. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்). iii, (3), 105 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 250.00, அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-7530-03-1. இந்நூலில் திருமறைக் கலாமன்றத்தினரின் மன்றத்தின் பிரதி இயக்குநர் யோ.யோண்சன் ராஜ்குமார் அவர்களின் தலைமையில் ஒக்டோபர் 2016இல் மேற்கொண்ட கடல் கடந்த கலைத்தூதுப் பயணங்கள் பற்றி அவ்வப்போது எழுதப்பட்ட கட்டுரைகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. அப்பயணத்தின் போதும் அப்பயணத்தின் முன்னும் பின்னும் நிலவிய சூழல், பின்புலம் பற்றியும், அரங்கேற்றப்பட்ட அளிக்கைகள், அவற்றின் எதிரொலிகள் பற்றியும் அப்பயணத்தில் பங்குபற்றிய கலைஞர்கள் தமது பட்டறிவையும், நினைவின் நிழல்களையும் பகிர்ந்துகொள்ளும் ஆவணமாக இது அமைந்திருக்கிறது. கண்டங்களைக் கடந்த கலைப்பயணம் (யோ.யோண்சன் ராஜ்குமார்), கனேடிய நகரிற்கான நம் கலைப்பயணம் ஓர் அனுபவப் பகிர்வு (சுகன்யா அரவிந்தன்), சிந்தனைகளைக் கிளறிய கனடா கலைப்பயணம் (பொ.தை.ஜஸ்ரின் ஜெலூட்), கடல் கடந்த ஒரு கலை உலா (திருமதி வைதேகி செல்மர் எமில்), வடலிகள் வளரும் மேப்பிள் மரக்காடு ஒரு பயண அனுபவக் குறிப்பு (இ.ஜெயகாந்தன்), கனடா திருமறைக் கலாமன்றத்தின் சர்வதேச கலைப்பாலம் – 2016 (பேராசிரியர் இ.பாலசுந்தரம்), திருமறைக் கலாமன்றம் கட்டிய கலைப்பாலம் (ப.ஸ்ரீஸ்கந்தன்), திருமறைக் கலாமன்ற கடல் கடந்த கலைப் பயணங்கள் (யோ.யோண்சன் ராஜ்குமார்) ஆகிய கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
Finest On line Position Websites Philippines Finest Filipino Ports Gambling enterprises
Articles Do i need to earn real money to play totally free slots? | Wild Spirit slot machine Sweet Bonanza (Practical Play) To make your