14515 தமிழ் மரபில் நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் நடிப்புப் பண்பாடு.

பால. சுகுமார். சென்னை 600020: உயிர்மை பதிப்பகம், எண். 5, பரமேஸ்வரி நகர் முதல் தெரு, அடையார், 1வது பதிப்பு, டிசம்பர் 2019. (சென்னை 600077: மணி ஓப்செட்). (16), 17-54 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 70.00, அளவு: 18×12 சமீ., ISBN: 978-0-9919755-3-2. திருக்கோணமலை மாவட்டத்தின் சேனையூர் கிராமத்தில் பிறந்தவர் பாலசிங்கம் சுகுமார். சேனையூர் மத்திய கல்லூரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயின்ற இவர் ஆசிரியராகவும், விரிவுரையாளராகவும் பணியாற்றி, பிரித்தானியாவுக்குப் புலம்பெயரும் வரை கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவராகவும் பணியாற்றியவர். அரங்கியல் துறையில், கூத்துப் பண்பாட்டுத்துறையில் மிகுந்த ஆளுமை மிக்கவர். இவரது பார்வையில் தமிழகத்தின் திரைப்படக் கலைஞர் சிவாஜி கணேசனின் நடிப்புப் பண்பாடு பற்றிய திறனாய்வுக் கருத்துக்கள் இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. முன்னுரையில் ‘சிவாஜி கணேசனுக்குப் பிரியாவிடை கூறல்” என்ற தலைப்பில் பேராசிரியர் கா.சிவத்தம்பியின் கட்டுரை அமைகின்றது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நடிப்புக் கோட்பாடுகளும், நானும் நடிகர் திலகமும், கற்பனைக்கு மிஞ்சிய நடிப்பு, தமிழின் அடையாளமாய் நடிகர் திலகம், மரபிலிருந்து நவீனத்திற்கு ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

12960 – பிரித்தானியாவின் புதிய அடிப்படை வரலாறு: இரண்டாம் பகுதி 1485-1688.

யொட்சு தவுன்சென் உவாணர், சி.என்றி கே. மாட்டின், டி.எசுகின் மூர் (ஆங்கில மூலம்). சோ.நடராசா (தமிழாக்கம்). கொழும்பு 7: வெளியீட்டுப் பிரிவு, அரச கரும மொழித் திணைக்களம், 1வது பதிப்பு, 1961. (கொழும்பு: இலங்கை