14518 சைவநாதம்: சைவப் புலவர் பொன்மலர் 1960-2010.

சு.செல்லத்துரை (மலராசிரியர்). யாழ்ப்பாணம்: அகில இலங்கைச் சைவப் புலவர் சங்கம், 153, காங்கேசன்துறை வீதி, கொக்குவில், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை). 232 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ. 30.10.1960இல் மல்லாகம் இந்துக் கல்லூரியில் இந்து சாதனம் பத்திரிகையாளர் நம. சிவப்பிரகாசம் அவர்களின் தலைமையில் கால்கோளிடப்பட்டது. அன்றிலிருந்து புலவர் பரீட்சை, நூல்வெளியீடு உள்ளிட்ட பல்வேறு தமிழ்ப் பணிகளை இச்சங்கத்தினர் ஆற்றிவருகின்றனர். இச்சங்கத்தின் பொன்விழாவை முன்னிட்டு 03.10.2010 அன்று இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது. வாழ்த்தியல் நாதம், வரலாற்று நாதம், தத்துவ நாதம், தோத்திர நாதம், வாழ்வியல் நாதம் ஆகிய பிரிவுகளின் கீழ் தமிழியல்சார் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. பின்னிணைப்புகளாக சங்கம் வளர்த்த சான்றோர்கள், சங்கம் கௌரவித்த சான்றோர்கள், சங்க அமைப்பு விதிகள், பரீட்சைகளும் பாடத்திட்டமும், தேர்வு விண்ணப்பப் படிவம், பொன்விழாவில் பட்டம் பெறுவோர், பொன்விழாப் போட்டிகளில் பரிசுபெற்றோர், பொன்விழா நிகழ்ச்சி நிரல் ஆகிய தகவல்கள் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 49374).

ஏனைய பதிவுகள்

14107 அனலைதீவு ஸ்ரீ ஹரிஹர புத்திர ஐயனார் ஆலயம்: இராஜகோபுர கும்பாபிஷேகச் சிறப்பு மலர் ; 2012.

கணேசையர் சௌந்தரராஜன் சர்மா (தொகுப்பாசிரியர்). அனலைதீவு: நயினார்குளம் ஐயனார் ஆலய பரிபாலன சபை, 1வது பதிப்பு, ஜுலை 2012. (சுன்னாகம்: கிருஷ்ணா பிரின்டர்ஸ், டாக்டர் சுப்பிரமணியம் வீதி, சுன்னாகம்). x, 200 பக்கம், புகைப்படங்கள்,

Lucky beste mobile casino Signora Charm

Content Aktuelle Spielautomaten Kostenlos Vortragen Please Enter Your Year Of Birth Lucky Signora Charm Angeschlossen Echtgeld Ended up being wird durch runde wann pu programir