14520 மகா பாரதக் கதை: பழகு தமிழ் நூல்.

சு.சிவராஜா. யாழ்ப்பாணம்: இலக்கிய நண்பர் வெளியீடு, 1வது பதிப்பு, புரட்டாதி 2004. (முல்லைத்தீவு: அந்திவானம் பதிப்பகம், புதுக்குடியிருப்பு). 68 பக்கம், விலை: ரூபா 60.00, அளவு: 21×14 சமீ. ராஜாஜி 105 அத்தியாயங்களில் “வியாசர் விருந்து“ என்ற பெயரில் பழகு தமிழில் எழுதிய மகா பாரதக் கதையைப்போன்று, இந்நூலாசிரியர் 22 அத்தியாயங்களில் புகலிடத் தமிழ்ச் சிறார்களை மனதில் இருத்தி எழுதி வழங்கியுள்ளார். கங்காதேவி, பரிமளகந்தி, அம்பை-அம்பிகை-அம்பாலிகை, குந்தியும் மந்தரையும், அரங்கேற்றம், வாரணாவதம், வேத்திரகீயம், திருமணம், தீர்த்தயாத்திரை, இராஜசூயம், சூதும் வாதும், தவமும் பவமும், சாபமும் சோகமும், கனியும் பொய்கையும், வண்ண மகளும் பேடி மகளும், தூதுவர் மூவர், தூதும் சூதும், படைகள் எழுந்தன, வீட்டுமரும் துரோணரும் வீழ்ந்தனர், கர்ணனும் சல்லியனும் வீழ்ந்தனர், துரியோதனன் வீர சுவர்க்கம், தருமபுத்திரன் அரசாட்சி ஆகிய தலைப்புகளில் மகாபாரதக் கதை சுவையாகவும் சுருக்கமாகவும் சொல்லப்பட்டுள்ளது. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39948).

ஏனைய பதிவுகள்

14918 தடங்கள்: மர்ஹூம் ஏ.எல்.அப்துல் மஜீது அவர்களின் 15ஆம் வருட நினைவிதழ்.

கனகசபை தேவகடாட்சம். (தொகுப்பாசிரியர்). திருக்கோணமலை: முற்போக்கு வாலிபர் மன்றம், கிண்ணியா, 2வது பதிப்பு, டிசெம்பர் 2002, 1வது பதிப்பு, நவம்பர் 2002. (திருக்கோணமலை: ரெயின்போ மினிலாப், 361, நீதிமன்ற வீதி). 58 பக்கம், புகைப்படங்கள்,