வீரசிங்கம் பிரதீபன். வவுனியா: அன்னலீலா கலைக்கூடம், இல.9, 4ஆவது ஒழுங்கை, சாந்தசோலை வீதி, மகாறம்பைக்குளம், 1வது பதிப்பு, ஜனவரி 2019. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). xvi, 52 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 18×12.5 சமீ., ISBN: 978- 955-06821-2-6. ஆசிரியத் தொழிலோடு தன் இலக்கியப் பயணத்தையும் தொடர்ந்தவர் வீ.பிரதீபன். தற்போது கலாசார உத்தியோகத்தராக வவுனியா பிரதேச செயலகத்தில் பணியாற்றுகின்றார். இவரது ஆறாவது நூலாக இது வெளிவந்துள்ளது. இந்நூ லில் மழலைகள், சிறுவர் எமது ஆசை, நாம் இலங்கையர், எம்மதமும் எம் மதம், ஒன்று படுவோம், மரங்களைக் காப்போம், வெண்ணிலவே, விபத்து, பாட்டியும் தாத்தாவும், தங்கத் தாத்தா, வீரக் கும்பி, ஆலமரம், இயற்கை அன்னை, முற்றத்து ஒற்றைப்பனை, கூவு குயிலே, செருப்பு, பனம்பழம், தம்பளப் பூச்சி, கோழியும் குஞ்சுகளும், பெய்யாதோ பெரிய மழை, தைப்பொங்கல், கூண்டுக்கிளி, விளையாட்டு, வெண் சுருட்டு, இராவணன் ஆகிய 25 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கவிதையின் இறுதியிலும், அக்கவிதையில் பயன்படுத்தப்பட்ட அருஞ்சொற்களும், அவற்றிற்கான விளக்கங்களும் தரப்பட்டுள்ளன.