14523 செந்தமிழ் குழந்தைப் பாடல்கள்.

பத்மா இளங்கோவன் (புனைபெயர்: பத்மபாரதி). யாழ்ப்பாணம்: நாவேந்தன் பதிப்பகம், மயூரன் இல்லம், இராமலிங்கம் வீதி, திருநெல்வேலி கிழக்கு, 1வது பதிப்பு, ஜுன் 2017. (யாழ்ப்பாணம்: ஸ்ரீமாருதி பதிப்பகம், 555, நாவலர் வீதி). (4), 60 பக்கம், விலை: ரூபா 425.00, அளவு: 20.5×14.5 சமீ. நாவேந்தன் பதிப்பக வெளியீட்டு இலக்கம் ஐந்து. சிறுவர் இலக்கிய வரிசையில் பத்மா இளங்கோவனின் எட்டாவது நூலாக இது வெளிவந்துள்ளது. பாலர் கல்வியில் விஷேட பயிற்சிபெற்ற முன்னாள் ஆசிரியையான இவர் கல்லூரிக் காலம் முதல் இலக்கிய வாஞ்சையுடன் எழுத்துத் துறையில் ஈடுபட்டு வருபவர். கவிதை, கட்டுரை, சிறுகதை பல இவர் படைத்திருப்பினும் இவரது, குழந்தைகள்- சிறுவர்களுக்கான படைப்புக்கள் பிரபல்யமானவை. “பரிசு” என்ற சிறுவர் சஞ்சிகையை பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளியிட்டவர். தமிழ்நாடு கு.சின்னப்பபாரதி இலக்கிய அறக்கட்டளையின் சிறுவர் இலக்கியத்துக்கான விருதினை 2012இல் பெற்றுக்கொண்டவர்.

ஏனைய பதிவுகள்