செல்லையா குமாரசாமி. யாழ்ப்பாணம்: செ.ல்லையா குமாரசாமி, நாவற்குழி மேற்கு, கைதடி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (யாழ்ப்பாணம்: வைரஸ் கிரப்பிக்ஸ், இணுவில்). (8), 60 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 25×18 சமீ. “மாங்கனி”, “பாட்டுப் பாடுவோம்” ஆகிய சிறுவர் பாடல் நூல்களை வழங்கியுள்ள கவிஞர் செ.குமாரசாமியின் மூன்றாவது குழந்தைப் பாடல் தொகுதி இதுவாகும். பேராசை கொண்ட நரியார், தேர்த்திருவிழா, கோடை மழை, வெளவால், கோழியாரே, வேட்டை, புதிய பள்ளி, உறவுக்குள்ளே சண்டை, வேட்டை ஆட, பாடிப் பிழைக்க வந்தோம், அன்புடையோராய் வாழ்வோம், அம்மாவுடன் உறங்க, தூங்கம்மா, ஓடும் முகிலே, என்னை வளர்ப்பேன், இயல்பலாதன செய்யேல், சின்ன மாமா, வன்னி வளம், ஆகாயக் கப்பல் ஏறி, வேலி பாய்ந்த கலைமான், எந்தக் கதை சொல்ல, நான் நல்ல பிள்ளை, தம்பிப் பாப்பா, வீட்டுத் தோட்டம், விடுமுறை நாட்களில், எங்கள் ஆட்டுக்குட்டி, எளியாரும் வலியாரும், ஆசிரியரின் அறிவுரை, பெற்றோர் சொற் கேளுங்கள், கொழும்புக்குப் போனேன், இயற்கை, பிள்ளை நிலா, சேமிப்போம், பிறந்த நாள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 34 பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.