14525 மழலை அமுதம் (கவிதைத் துளிகள்).

பீ.பீ.அந்தோனிப்பிள்ளை. மன்னார்: பீ.பீ. அந்தோனிப்பிள்ளை, ஆத்திக்குழி, முருங்கன், 1வது பதிப்பு, மார்கழி 2011. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு). vii, 51 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978- 955-0635-30-6. கவிஞர் பீ.பீ.அந்தோனிப்பிள்ளை அவர்கள் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கலை, இலக்கியம், நாட்டுக்கூத்து, நாடகம், பாடல்கள் எனப் பலவிதமான அழகியல்சார் முயற்சிகளில் ஈடுபடுபவர். வடமாகாண ஆளுநர் விருது, செம்மொழி மாநாட்டில் சிறுவர் இலக்கியப் படைப்புக்கான விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். சிறுவர் இலக்கியத்தில் இருபதுக்கும் அதிகமான நூல்களை எழுதியவர். 47 கவிதைகளை உள்ளடக்கிய இந்நூல் புதுக்கவிதை வடிவில் அமைந்துள்ளது. சிறுவர்களின் மனக்குறைகளை பதிவுசெய்யும் சில கவிதைகள், பெற்றோரின் திணிப்பால் குழந்தைகள் அவதியுறும் நிலைமைகளையும் சித்திரிக்கின்றன. சில கவிதைகள் சமூக ஒழுக்கக் குறைபாட்டை சுட்டிக்காட்டி நிவாரணம் தேடுகின்றன. பெற்றோரின் கடமையை ஒரு கவிதை மீள்நிர்ணயம் செய்கின்றது. சுமைதாங்கி என்ற கவிதை தாயின் கஷ்டத்தை பிள்ளையிடம் ஒப்பித்து அவர்களையும் உணரவைக்கின்றது. இவரது கவிதைகளில் கவிஞரின் கருத்துநிலை, சமூகப் பார்வை, அரசியல் சித்தாந்தம் முதலியன தெளிவாகத் தெரிகின்றன. தான் கண்டதையும் கேட்டதையும் காண விரும்பியதையும் ஒரு நேர்கோட்டில் வைத்து நோக்குவதாக இவரது கவிதைகள் அமைகின்றன.

ஏனைய பதிவுகள்