14526 மழலை ஓவியங்கள்.

த.அஜந்தகுமார். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, டிசம்பர் 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 24 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-25-2. கவிதை, கட்டுரை, சிறுகதை, பத்தி, விமர்சனம் என தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் பயணிக்கும் த.அஜந்தகுமாரின் கைவண்ணத்தில் எழுந்த குழந்தைகளுக்கான பாடல்களின் தொகுப்பு இது. மழலைகளின் உள்ளத்தில் மகிழ்ச்சியையும் மலர்ச்சியையும் அடையச் செய்யும் கனிவான இப்பாடல்கள், அம்மா, மழை, நாய்க்குட்டி, பாட்டி, விளையாடுவோம், மழைப்பாட்டு, வண்ணத்துப் பூச்சி, கோழி, சைக்கிள், வெண்ணிலா, சூரியன், அப்பா, ஆசான், பொம்மை, பட்டம், பூனைக்குட்டி, தமிழ், பூனைக்குட்டி-2, அம்மா அப்பா பிடிக்குமே, வீட்டுத்தோட்டம் ஆகிய இருபது தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன. ஜீவநதி வெளியீட்டகத்தின் 137ஆவது பிரசுரமாக இந்நூல் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

14431 பாரதீயம்: சிற்றிலக்கண நூல் (இரண்டாம் பாகம்).

க.சு.நவநீத கிருஷ்ண பாரதியார். யாழ்ப்பாணம்: க.சு.நவநீத கிருஷ்ண பாரதி, மாவிட்டபுரம், தெல்லிப்பழை, 1வது பதிப்பு, 1948. (யாழ்ப்பாணம்: எஸ்.எஸ்.சண்முகநாதன் அண்ட் சன்ஸ்). (5), vii, 146 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12

14778 நெருஞ்சி முள்ளு.

இ.தியாகலிங்கம். நோர்வே: இ.தியாகலிங்கம், Vetlandsveien 117, 0686 Oslo,1வது பதிப்பு மே 2019. (மின்நூல் வடிவமைப்பு lulu.com சுய வெளியீடு உதவி). 61 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-0-244-

12707 – சோஃபகிளிஸின் மன்னன் ஈடிப்பஸ்.

சோஃபகிளீஸ் (கிரேக்க மூலம்), குழந்தைம.சண்முகலிங்கம் (தமிழாக்கம்), நாகேந்திரம் நவராஜ் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39,