14527 எங்கள் காடு: சிறுவர் நாடகம்.

அகளங்கன் (இயற்பெயர்: நா.தர்மராஜா). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 22 பக்கம், விலை: ரூபா 110.00, அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-7461-28-1. சிறுவர் நாடகங்கள் மூலம் பல விடயங்களை மாணவர்களுக்குக் கற்பிக்கமுடிகின்றது. மாணவர்களின் மகிழ்ச்சியான கல்விச் செயற்பாட்டிற்கு நாடகப் பயிற்சி பெரிதும் துணைநிற்கின்றது. பாத்திரங்களாக மாறி மாணவர்கள் நடிக்கும்போது கருத்துக்கள் எளிதாக மனதில் பதிகின்றன. பார்ப்பவர்களுக்கும் பார்த்தல் கேட்டல் ஆகிய இரண்டு புலன்கள் மூலம் கருத்துக்கள் இலகுவாக உள்ளத்தை ஊடுருவுகின்றன. சிறுவர்களுக்கான நாடகப் பிரதிகள் பரவலாக இல்லாத சூழ்நிலையில் அகளங்களின் இந்நாடகநூல் வெளிவருகின்றது. “எங்கள் காடு” என்ற இந்நாடக நூல் படிக்கவும் நடிக்கவும் என இரண்டு வகையான பயன்பாட்டினைக் கொண்டுள்ளது. பறவைகள், விலங்குகளைப் பாத்திரங்களாகக் கொண்டிருந்தாலும், சமூகம் சார்ந்த நாடகம் என்பதால் பேச்சு மொழியையே ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

12191 – மனிதனின் கௌரவப் பெயர்.

M.S.M.முபாறக் (புனைபெயர்: மருதவாசி). மருதமுனை-3: மக்காமின் அமீன் பப்ளிக்கேஷன்ஸ், ஹிஜ்றா வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2005. (அக்கரைப்பற்று-01: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்ட்). (2), 129 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5