14528 கல்லூரி நாடகங்கள்: ஆறு நாடகங்களின் தொகுதி.

பா.இரகுவரன். பருத்தித்துறை: பா.இரகுவரன், பிராமின் வீதி, தும்பளை, 1வது பதிப்பு, ஜுலை 2007. (பருத்தித்துறை: நியு S.P.M. ஓப்செட் பிரின்டர்ஸ், வீ.எம்.வீதி). xiii, (4), 92 பக்கம், விலை: ரூபா 175., அளவு: 20.5×14 சமீ. இந்நூலில் சிட்டுக் குருவிகள், முற்றத்து வேம்பு, அழிதல் காணும் பூவுலகம், குருபீடம், மெல்லத் தமிழினி, கணித மேதை ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கல்லூரி நாடகங்கள் இடம்பெற்றுள்ளன. சமூகத்தில் காணப்படும் நடைமுறைப் பிரச்சினைகளையே ஆசிரியர் இந்நாடகங்களின் கருவாக்கியுள்ளார். நாடகங்கள் சமுதாயத்தில் நிலவும் குறைபாடுகளை, பிரச்சினைகளை புட்டுக்காட்டுவதோடு மட்டும் நின்றுவிடாது, அவற்றைத் திருத்திக் கொள்ளவேண்டும் அல்லது மாற்றியமைக்கவேண்டும் என்ற மனோபாவத்தை ரசிகர்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும் என்ற மன எழுச்சியை தோற்றுவிக்கும் நோக்கத்தில் இந்நாடகங்கள் எழுதப்பட்டுள்ளன. பாத்திரங்களின் பேச்சுகளும் ஏச்சுகளும் நகைச்சுவையாகவும், அதேவேளை கருத்தாழத்தையும் தெளிவாகப் புலப்படுத்தி நிற்கின்றன. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50127).

ஏனைய பதிவுகள்

15573 படைகளின் வரவால்.

சசி மகரிஷி. ஐக்கிய அமெரிக்கா: iPMCG வெளியீடு, வெளியீட்டுப் பிரிவு, Suite No. 100, 3311 Beard Road, Fremont, California, CA 94555, 2வது பதிப்பு, ஜனவரி 2019, 1வது பதிப்பு, நவம்பர்