ஸ்ரீ விசுவாம்பா விசாலாட்சி அம்மையார். கொழும்பு: பேலியகொடை ஸ்ரீ பூபாலவிநாயகர் ஆலயம், 1வது பதிப்பு, 1997. (வத்தளை: காரைநகர் பாலா அச்சகம்). (6), 94 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு: 22×14 சமீ. பெரிய புராணம், கந்தபுராணம் ஆகிய பக்தி இலக்கியங்களிலிருந்து எடுக்கப்பட்ட பல்வேறு கருத்துக்கள் அடங்கிய 18 சிறுவர் நாடகங்களைக் கொண்ட நூல். குழந்தைகளின் சமய அறிவையும் பண்பாட்டையும் வளர்ப்பதில் இந்நாடகங்கள் அக்கறை கொண்டுள்ளன. கடவுள் எங்கும் இருக்கிறார், நீதி, திருமணம் நின்றது, தெய்வத் தமிழ் தந்த பெருமான், பெண்ணாசையை வென்றவர், இல்லை என்று கூறாதவர், அமுது படைத்தார் அன்பர், கோவணத்தின் பெருமை, அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ், கல் தோணியாகிறது, அன்பின் வெற்றி, மாங்கனி, அழுத பிள்ளை பால் குடிக்கும், பையவே சென்று பாண்டியற்காகவே, குருவருள் பெற்ற ஞான போதகர், மண் சுமந்த பொன் மேனியர், ஊமைப்பெண் பேசியது, விதியை வென்ற இளைஞர் ஆகிய 18 தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17545).