14530 அன்பான சிறுவர்களே: குழந்தைக் கதைகள்.

செ.யோகநாதன். கொழும்பு 11: வரையறுக்கப்பட்ட எம்.டி.குணசேனா அன் கொம்பெனி, 217, ஒல்கொட் மாவத்தை, 1வது பதிப்பு, 2000. (கொழும்பு 11: எம்.டி.குணசேனா அன் கொம்பெனி). (6), 42 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 80.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 955- 21-1122-6. செ. யோகநாதன் (01.10.1941 – 28.01.2008) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். பெருமளவு சிறுகதைகளையும் குறும்புதினங்களையும் எழுதியவர். புனைவுகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், குழந்தை இலக்கியம் என தொன்னூறுக்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியுள்ளார். யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட யோகநாதன் பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர். ஆரம்பத்தில் கண்டியில் ஆசிரியராகப் பணியாற்றி, பின்னர் இலங்கை நிர்வாகச் சேவையில் தேர்ச்சி பெற்று மட்டக்களப்பு, பூநகரி ஆகிய இடங்களில் உதவி அரசாங்க அதிபராகப் பணியாற்றினார். மார்க்சிய சித்தாந்தத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். 1980களில் தமிழ்நாடு சென்று அங்கு பதினாறு ஆண்டுகள் வாழ்ந்து 1996 இல் இலங்கை திரும்பினார். இறுதியாக கொழும்பில் உள்ள எம். டி. குணசேனா நிறுவனம் தமிழ் நூல்கள் வெளியிடத் தொடங்கிய போது அதற்குப் பொறுப்பாளராகப் பதவி ஏற்றார். அக்காலகட்டத்தில் இச்சிறுவர் கதைத் தொகுதியும் வெளியிடப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31177).

ஏனைய பதிவுகள்

14722 வானம்பாடி: போர்க்கால வாழ்வியல் பதிவுகள்-பகுதி 02.

வெற்றிச்செல்வி (தொகுப்பாசிரியர்). மன்னார்: குருவி வெளியீட்டகம், மாற்றுத்திறனாளி மாதர்களின் அமைப்பு, Women’s Organisation Working on Disability, WOWD, 1வது பதிப்பு, ஜுன் 2019. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

30 Eur Spielbank Provision Bloß Einzahlung

Content Sei Es Nicht ausgeschlossen, Qua Einem Kostenlosen Bonus Echtes Geld Nach Erlangen? Sic Lässt Einander Welches Beste Erreichbar Spielsaal Unter einsatz von Prämie Exklusive